உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / டிரம்ப்-புடின் சந்திப்பில் எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகாது: ரஷ்யா திடீர் அறிவிப்பு

டிரம்ப்-புடின் சந்திப்பில் எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகாது: ரஷ்யா திடீர் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாஸ்கோ: டிரம்ப்-புடின் சந்திப்பின் போது எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாக போவது இல்லை என்று ரஷ்யா அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புடின் இருவரும் அலாஸ்காவில் இன்று (ஆக.15) சந்தித்து பேசினர். முன்னதாக, டிரம்ப் சந்திப்பின் போது எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாக போவதில்லை என்று ரஷ்யாவின் க்ரெம்ளின் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது.இது குறித்து க்ரெம்ளின் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறி உள்ளதாவது; இந்த பேச்சுவார்த்தை மிக குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. எனவே, இதன் முடிவுகள் எப்படி இருக்கும் என்று கணிக்க முடியாது. இருநாடுகளின் தலைவர்களும் மிகவும் சிக்கலான பிரச்னைகள் பற்றி விவாதிக்க உள்ளனர். எனவே எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகாது. இருநாடுகளின் புரிந்துணர்வுகள், பல்வேறு விவகாரங்களில் எதிர்கால ஒத்துழைப்பு போன்ற அம்சங்களில் ஒரு புரிந்து கொள்ளலை இந்த பேச்சுவார்த்தை ஏற்படுத்த செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

ManiMurugan Murugan
ஆக 16, 2025 00:23

அமெரிக்க அதிபர் ரஷ்யா மீது தடை அறிவித்தால் அமெரிக்க ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் பொருட்களை அதே வரிவிதிப்போடு அமெரிக்க வரி போன்றே வாங்க வேண்டும் அமெரிக்காவும் ஆயுதங்களை உக்ரைனுக்கு கொடுப்பது ம் தவறு தானே


JaiRam
ஆக 15, 2025 22:05

ஊழலில் கோபாலபுரம் அவனிடம் பிச்சை எடுக்க வேண்டும் அவ்வளவு மகா உழல்வாதி


ramesh
ஆக 15, 2025 21:25

ரஷ்யா மீண்டும் பழைய சோவியத்ரஷ்யா போன்று வலிமையுடன் வரவேண்டும் . 1970-80 களில் அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது போல மீண்டு வரவேண்டும் . இந்த கோமாளி டிரம்ப்ஐ விரட்டி அடிக்க வேண்டும் . ரஷ்யா மட்டுமே 1960களில் இருந்து இந்தியாவின் உற்ற நம்பிக்கையான நண்பனாக இருக்கிறது


SP
ஆக 15, 2025 21:17

ட்ரம்பர் நம்ம ஊரு எடப்பாடியார் போல, அவரை நம்பி எந்த முடிவும் எடுக்க மாட்டார்கள்


K.Ravi Chandran
ஆக 15, 2025 20:45

சோனமுத்தா போச்சா?


நிக்கோல்தாம்சன்
ஆக 15, 2025 20:07

அமேரிக்கா வீழும் பொது உலக நாடுகள் கொண்டாடும்


Ramesh Sargam
ஆக 15, 2025 20:36

ஆனால் பாக்கிஸ்தான் நாடு மட்டும் அழும்.


Ramesh Sargam
ஆக 15, 2025 19:50

பேச்சுவார்த்தையின்போது உக்ரைன் அதிபர் இருந்திருந்தால் ஏதோ ஒரு நல்ல முடிவு ஏற்பட்டிருக்கும். அவர் இல்லாமல் இவர்கள் இருவரும் என்ன முடிவு எடுக்க முடியும்?


sankar
ஆக 15, 2025 20:06

ஜெலன்ஸ்கய் முடிவுஎடுக்கும் நிலையில் இல்லை அமெரிக்கா எடுக்கும் முடிவுக்கு ஒத்து கொள்வதுதான் அவரின் நிலை


முக்கிய வீடியோ