உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / குற்றச்செயலில் பிரதமர் மோடிக்கு தொடர்பா; கொந்தளித்த இந்தியா; பணிந்தது கனடா!

குற்றச்செயலில் பிரதமர் மோடிக்கு தொடர்பா; கொந்தளித்த இந்தியா; பணிந்தது கனடா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஒட்டாவா: 'இந்தியாவின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து, கனடாவில் நடந்த குற்றச் செயல்கள் எதிலும், பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தோவல் ஆகியோரை தொடர்புபடுத்தவில்லை' என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.ஹர்தீப் சிங் நிஜ்ஜாரைக் கொல்வதற்கான சதித்திட்டம், இந்திய அரசின் உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கு தெரியும் என கனடா ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. கனடாவில் நடந்த குற்றச் செயல்களில் பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தோவல் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக கூறும் பொய்யான தகவல்களை, கனடா அரசு அதிகாரிகளே பரப்பி விடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=b2fjyb2p&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்கு இந்திய அரசு சார்பில் கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கனடா பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நதாலி ஜி ட்ரூயின் வெளியிட்ட அறிக்கை: பிரதமர் மோடி, அமைச்சர் ஜெய்சங்கர் அல்லது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை கடுமையான குற்றச் செயல்களுடன் தொடர்புபடுத்துவது குறித்து கனடா அரசு கூறவில்லை. இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மாறாக, இது ஊகமானது மற்றும் தவறானது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.'இது போன்ற அவதூறு பிரசாரங்கள் ஏற்கனவே சிதைந்திருக்கும் இரு நாட்டு உறவுகளை மேலும் சேதப்படுத்தும்' என மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

PARTHASARATHI J S
நவ 23, 2024 07:44

ட்ரூடோ ரொம்ப அப்பாவியாக இருக்கிறார்கள். யார் சொன்னாலும் உடனே நம்பி விடுகிறார். அந்த நாட்டில் உளவுத்துறை லட்சணம் அவ்வளவுதானா ? போக்கெடம் இல்லாத காலிஸ்தானியர்கள் கனடா தங்களது நாடு என பினாத்துறான்கள்.


Venkatesan Srinivasan
நவ 22, 2024 19:14

இந்தியாவிற்கு எதிராக சதி நாசவேலை பயங்கரவாத திட்டம் தீட்டுபவர் எந்த நாட்டை சேர்ந்த எந்த பெரிய தலைவர் ஆனாலும் அவர்களை எந்த இடத்திலும் ஒடுக்க, ஒழித்துக்கட்ட இறையாண்மை தாங்கிய இந்தியாவிற்கு எல்லா உரிமையும் உள்ளது. நம் பாரத நாட்டிற்கு எதிராக வெளிநாட்டில் உட்கார்ந்து கொண்டு வேலை செய்தால், வேடிக்கை பார்க்க முடியாது. முதலில் இந்தியா உள்ளேயே - இங்கேயே உண்டு உறங்கி கொழுத்து திரியும் உள்நாட்டு எதிரிகளை ஒழிக்க வேண்டும். ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் சத்யமேவ ஜெயதே.


sridhar
நவ 22, 2024 17:00

UPA I , II ஆட்சியின்போது இலங்கையிடம் கூட இந்தியா பயந்தது .


N.Purushothaman
நவ 22, 2024 12:18

அமீத் ஷா பெயரை விட்டது ஏனோ ?


vadivelu
நவ 22, 2024 14:10

மறந்து போயிருச்சாம், அடுத்து வரும்போது அண்ணாமலையையும் சேர்த்துடுவாராம். மகிழ்ச்சிதானே.


N.Purushothaman
நவ 22, 2024 15:40

முதல் முதலில் தோவல் பெயரை கூறினார்கள் ...அடுத்தது கனடாவிற்கான தூதர் வர்மா அவர்கள் பெயரை கூறினார்கள் ...அதற்க்கு பின்பு அமீத் ஷாவை இழுத்தார்கள் ...இப்படி பட்டியல் நீண்டுகிட்டே போயி கடைசியில் மோதியையும் இழுத்தார்கள் ...ஆனால் மறுப்பு அறிக்கையில் சிலரின் பெயரை வேண்டுமென்றே தவிர்த்து உள்ளார்கள் ....அப்படீன்னா அவிங்க மேல இன்னமும் கனடா அரசு காண்டுல இருக்கிறது என்பது தானே உண்மை ...


Ramesh Sargam
நவ 22, 2024 12:15

ட்ருடோ முதலில் பதவி விலகவேண்டும். ஆனால் என்ன, பதவி விலகியவுடன் வாழ்நாள் முழுக்க அந்த காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு பயந்து வாழவேண்டும்.


Mohammad ali
நவ 22, 2024 12:15

இருந்தாலும் என்ன. கனடா ரொம்ப யோக்கியமோ . நம் நாட்டுக்கு எதிரா எவன் பேசினாலும் அவன் நம் எதிரிதான் அவன் இந்தியனாவே இருந்தாலும்.


Kumar Kumzi
நவ 22, 2024 12:47

அப்போ நம்பிள் பப்பூ எப்படி?


Duruvesan
நவ 22, 2024 12:53

பாஸ் உங்களுக்கு அரபி தெரியும் னு நெனைக்கிறேன், புனித நூல் சரியா புரிஞ்சி இருக்கீங்க அதான் தாய் நாட்டை விட்டு கொடுக்கல. 90% பேர் தாய் நாட்டை நேசிப்பது இல்லை. உங்களால் முடிந்த அளவு திருத்துங்கள்


vadivelu
நவ 22, 2024 14:11

ஆஹா , பெயரை வச்சு நல்ல பேர் வாங்கி கொடுக்கிறீங்களா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை