உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மீனவர்கள், படகுகளை விடுவிக்கணும்; இலங்கை அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்

மீனவர்கள், படகுகளை விடுவிக்கணும்; இலங்கை அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொழும்பு: ''இலங்கை சிறைகளில் இருக்கும் இந்திய மீனவர்களை விடுவிக்க வேண்டும்; அவர்களது படகுகளையும் விடுவிக்க வேண்டும்'' என இலங்கை அதிபர் அநுராவிடம் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.கொழும்பு நகரில் இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக உடன் பிரதமர் மோடி சந்திப்பு நடத்தினார். இலங்கை அதிபர் மற்றும் பிரதமர் மோடி முன்னிலையில், இரு நாடுகளுக்கு இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே பல நூற்றாண்டுகள் பழமையான ஆன்மீக மற்றும் நெருக்கமான உறவுகள் உள்ளன.

மீனவர்களை விடுவிக்கணும்

இலங்கை பெற்ற கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைக்க முடிவு செய்துள்ளோம். மீனவர் விவகாரத்தில் மனிதாபிமான அணுகுமுறை வேண்டும். இலங்கை சிறைகளில் இருக்கும் இந்திய மீனவர்களை விடுவிக்க வேண்டும்; அவர்களது படகுகளையும் விடுவிக்க வேண்டும். தமிழர்களின் கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படும் என நம்புகிறேன்.

10ஆயிரம் வீடுகள்

பயங்கரவாத தாக்குதல், கொரோனா, பொருளாதார பிரச்னையில் இலங்கை தவித்த போது இந்தியா துணை நின்றது. இலங்கை அதிபராக அநுர குமார திசநாயக பதவியேற்ற பின் முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவை தேர்வு செய்தார். இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக 10 ஆயிரம் வீடுகளை இந்தியா கட்டிக் கொடுத்துள்ளது. இலங்கையில் உள்ள மூன்று கோவில்களை சீரமைக்க இந்தியா உதவும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

நிதி அளித்ததற்கு நன்றி

இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக பேசியதாவது: இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தரும் வகையில், எந்த செயலும் இந்த மண்ணில் நடக்காது. இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நட்பு நெருக்கமானது. டிஜிட்டல் பொருளாதார மேம்பாட்டின் முக்கியத்துவத்தை இலங்கை உணர்ந்திருக்கிறது. ரூ.300 கோடி நிதி தந்ததற்கு நன்றி. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Mr Krish Tamilnadu
ஏப் 05, 2025 16:50

ராஜதந்திரம் தெரிந்தவர் நமது பிரதமர். துப்பாக்கி மரியாதை வாங்கிய அந்த பிரதமர்க்கு, இவரின் அணுகுமுறைகள் எவ்வளவோ மேல். பொது வெளியில் வலியுறுத்தி தான் சொல்ல வேண்டும். நடவடிக்கை இல்லை என்றால் தான் பகடை ஆட வேண்டும். ஆட தெரிந்தவர். நமக்குள் குடும்ப சண்டை இருந்தாலும், நமது குடும்பத்தின் கம்பீரம் இவர். உயரிய விருதுக்கு வாழ்த்துக்கள் சார்.


Murthy
ஏப் 05, 2025 15:39

ஒரு சின்ன நாட்டை கூட கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவராமல் மண்டியிடுவது அவமானம்......


vijai hindu
ஏப் 05, 2025 23:36

அது சின்ன நாடா பின்புலத்துல சீனா இருக்கு நம்ம இந்தியா உதவி செய்யாட்டினா சீனா செய்ய ஆரம்பிக்கும்


ஆரூர் ரங்
ஏப் 05, 2025 14:27

அயலக அணி படகுகளை அங்கேயே வைத்துக் கொள்ளுங்கள். அவற்றால்தான் மற்றவர்களுக்கு பிரச்சினை.


Mediagoons
ஏப் 05, 2025 14:25

நாடகம். விடுவித்துவிட்டார்களா?


vivek
ஏப் 05, 2025 17:10

சட்டசபை தீர்மானம் வேலைக்கு ஆகளையா


vivek
ஏப் 05, 2025 17:13

ஒரு ட்ரில்லியன் டாலரின் எவளோ படகு வாங்கலாம்


அப்பாவி
ஏப் 05, 2025 13:58

அடடே... கச்சத்தீவு! முடியாதுன்னு தெரிஞ்சுதானே கடிதம் எழுதுனோம்?


Palanisamy T
ஏப் 05, 2025 13:47

மீனவர்கள் படகுகள் பிடிபதுவது பறிமுதல் செய்வது அடிக்கடி நடக்கும் நிகழ்வுகள். ஒவ்வொரு தடவையும் இப்படிதான் நடக்குமா, இதற்க்கு நிரந்தர தீர்வுதான் என்ன?