உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஜி7 மாநாட்டில் பங்கேற்க கனடா சென்றடைந்தார் பிரதமர் மோடி; உற்சாக வரவேற்பு

ஜி7 மாநாட்டில் பங்கேற்க கனடா சென்றடைந்தார் பிரதமர் மோடி; உற்சாக வரவேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஒட்டாவா: ஜி7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி கனடா சென்றடைந்தார். அங்கு பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய மூன்று நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதலாவதாக, மேற்காசிய நாடான சைப்ரசுக்கு அவர் நேற்று முன்தினம் சென்றார். பிரதமர் நரேந்திர மோடிக்கு, சைப்ரஸ் நாட்டின் உயரிய விருதான, 'கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர் ஆப் மகாரியோஸ் 3' விருதை, அந்நாட்டின் அதிபர் நிக்கோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ் வழங்கினார். தற்போது சைப்ரஸ் நாட்டின் பயணத்தை முடித்து கொண்டு கனடா நாட்டிற்கு பிரதமர் மோடி சென்றடைந்தார். அங்கு பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர், கனடாவில் நடந்து வரும் ஜி7 மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளார். ஜி7 உச்சி மாநாட்டிற்கு இடையே பல்வேறு உலக தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார். பிரதமர் மோடி பங்கேற்கும் 6வது ஜி7 உச்சி மாநாடு இதுவாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

venugopal s
ஜூன் 17, 2025 21:25

மற்றும் ஒரு விருதை 'வாங்கி' விட்டாரா?


தீரேஷ்
ஜூன் 17, 2025 16:44

விருது உண்டா? ஏற்கனவே வாங்கியாச்சா?


Srinivasan Krishnamoorthy
ஜூன் 17, 2025 13:21

India is a bigger economy than canada. canada is depending on indian students /.. India poised to take higher position. so no worries


S.L.Narasimman
ஜூன் 17, 2025 12:41

மோடி அவர்கள் முதலில் தீவிரவாதத்தையும் தீவிரவாதிகளையும் ஒழிக்க ஜி7 நாட்டினரிடம் புரியும்படி சொல்லவேண்டும். அப்பொழுதுதான் நாட்டின் பொருளாதாரம் மேம்படும்ன்னு அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.


Indian
ஜூன் 17, 2025 09:13

இந்திய மக்களுக்கு எந்த பலனும் இல்லை.


Kumar Kumzi
ஜூன் 17, 2025 09:41

அதை பற்றி பேச இந்தியன் பெயரில் உலாவும் பங்களாதேஷ் கள்ளக்குடியேறி ரோஹிங்கியாவுக்கு என்ன உரிமை இருக்கு


Sudha
ஜூன் 17, 2025 08:37

உண்மையில் நமஸ்ட் தெரிந்து கொள்ள வேண்டியது பிரதமர் சென்ற விமானம் எது, மற்ற அதிகாரிகள் சென்ற விமானங்கள் எவை? இவற்றின் பராமரிப்பும் ஆய்வும் யாரிடம் உளளது? இது தீவிரவாத கேள்வி அல்ல, பஹல்கம் நிகழ்வை விட நாட்டின் மதிப்பை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ள விமான விபத்தின் விளைவான ஆதங்கம்


ஆரூர் ரங்
ஜூன் 17, 2025 09:10

தெனாலி டைப் பயமா?


புரொடஸ்டர்
ஜூன் 17, 2025 08:24

இந்திய மக்களுக்கு எந்த பலனும் இல்லை.


vivek
ஜூன் 17, 2025 08:52

உன் கருத்து அவ்ளோ வொர்த் இல்லை ....போவியா


Kumar Kumzi
ஜூன் 17, 2025 09:43

பங்களாதேஸ் கள்ளக்குடியேறி ரோஹிங்கியா நீ இந்தியனா


கொங்கு தமிழன் பிரசாந்த்
ஜூன் 17, 2025 08:15

கனடா பிரதமர் மார்க் கார்னி மோடியை வரவேற்க வரவில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை