ஆஸ்திரேலியாவில் இந்திய இளைஞர் மீது இனவெறி தாக்குதல்
அடிலெய்டு: ஆஸ்திரேலியாவில் கார் பார்க்கிங் தொடர்பான பிரச்னையில் இந்தியர் ஒருவரை ஐந்து பேர் கும்பல் ஆபாசமாக திட்டி, கடுமையாக தாக்குதல் நடத்தியது. ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு பகுதியில் இந்தியர் சரண்ப்ரீத் சிங் தன் மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் கடந்த 19ம் தேதி மனைவியை அழைத்துக் கொண்டு ஆண்டுதோறும் நடக்கும் ஒளி திருவிழாவை காண காரில் சென்றார். கின்டோர் அவென்யூ என்ற பகுதியில் காரை பார்க் செய்ய முயன்ற போது, சரண்ப்ரீத் சிங்கிற்கும், மற்றொரு காரில் வந்த இளைஞர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அந்த கும்பல் இனவெறி கருத்துக்கள் கூறி திட்டியபடி சரண்ப்ரீத்தை, முகம் மற்றும் வயிற்று பகுதிகளில் எட்டி உதைத்து தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.