உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வர்த்தக போர் தீவிரம்; சீன பொருட்களுக்கு 245 சதவீதம் வரி விதித்து டிரம்ப் அதிரடி

வர்த்தக போர் தீவிரம்; சீன பொருட்களுக்கு 245 சதவீதம் வரி விதித்து டிரம்ப் அதிரடி

வாஷிங்டன்: சீன பொருட்களுக்கு இதுவரை 145 சதவீதமாக இருந்த இறக்குமதி வரியை 245 சதவீதமாக உயர்த்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.அமெரிக்க அதிபர் டிரம்ப் பரஸ்பர வரி என்ற பெயரில் அனைத்து நாடுகளுக்கான இறக்குமதி வரியை உயர்த்தினார். இதற்கான அறிவிப்பை ஏப்ரல் 2ம் தேதி அதிபர் டிரம்ப் வெளியிட்டார். பின் அமெரிக்காவுடன் பேச்சு நடத்திய 60க்கும் மேற்பட்ட நாடுகளின் வரியை நிறுத்தி வைத்தார்.பேச்சு நடத்த முன் வராத சீனாவுக்கு மட்டும் வரி உயர்வில் விலக்கு அளிக்கவில்லை. மாறாக சீனாவுக்கான வரியை 145 சதவீதமாக டிரம்ப் உயர்த்தினார். பதிலுக்கு சீனா அமெரிக்கா மீது 125 சதவீத வரி விதித்தது. ஸ்மார்ட்போன், செமி கண்டக்டர் எனப்படும் மின்னணு சிப்கள், கணினிகள் ஆகிய உயர் தொழில்நுட்ப பொருட்களுக்கான வரியில் இருந்து மட்டும் சீனாவுக்கு அமெரிக்கா விலக்கு அளித்துள்ளது.சீனா தன் உள்நாட்டு விமான நிறுவனங்களிடம் அமெரிக்காவில் இருந்து போயிங் மற்றும் பிற நிறுவனங்களின் விமானங்கள் மற்றும் உதிரி பாகங்கள் வாங்குவதை நிறுத்தி வைக்கும்படி உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 16) சீன பொருட்களுக்கு இதுவரை 145 சதவீதமாக இருந்த இறக்குமதி வரியை 245 சதவீதமாக உயர்த்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. சீனாவின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு பதிலடி கொடுப்பதற்காக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.அமெரிக்கா- சீனா ஆகிய இருநாடுகளுக்கு இடையே வர்த்தகப் போர் தீவிரம் அடைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Srinivasan Krishnamoorthy
ஏப் 17, 2025 07:37

Trump is doing right thing. so far chinese leaders bribed US government authorities and got access to huge US market, now everyone has woken up especially US people are fed-up with Chinese products


SP
ஏப் 16, 2025 21:55

அதிக வரி விதிப்பால் அமெரிக்காவின் நட்பு நாடுகள் கூட சீனா பக்கம் சாய்வதற்கு வாய்ப்பு உள்ளது


Srinivasan Krishnamoorthy
ஏப் 17, 2025 07:35

without US and European market chinais nothing. already European countries are reluctant to side with china. Australia rejected chinese call for support. china will face unprecedented isolation like Ukraine president is facing


தாமரை மலர்கிறது
ஏப் 16, 2025 19:47

சீனாவின் தற்போதைய நிலை அமெரிக்கா 1949 இல் இருந்த நிலையை விட சிறப்பாக உள்ளது. வளரும் பல நாடுகளின் உற்பத்தியை சீனா பெருக்கியுள்ளது. பே மி இன் யுவான் என்று சொன்னால், யுவானை ஒரே இரவில் சீனா ரிசர்வ் கரென்சியாக மாற்றமுடியும். ஏனனில் எல்லோருக்கும் அமெரிக்காவின் டாலரை விட சீனாவின் பொருள்கள் தேவை. நேற்றைக்கு பிரிட்டன் பவுண்ட், இன்றைக்கு அமெரிக்காவின் டாலர். நாளைக்கு சீனாவின் யுவான். டாலர் பேப்பருக்கு மரியாதை கிடையாது. பொருள்களை உற்பத்தி செய்பவருக்கு தான் மரியாதை.


V.Mohan
ஏப் 16, 2025 18:35

என்னமோ சீனாவை நல்லவர்கள் போலவும் டிரம்ப் ஐ விஷயம் தெரியாதவர் போலவும் சித்தரிக்கும் யாவரும் ஒரு விஷயம் புரிந்து கொள்ள வேண்டும். சீனா என்கிற நாடு எல்லா பொருள்களையும் தயாரிக்கிறது என்றாலும் வித்து காசாக்குறதுக்கு பெரிய நாடுகள் வாங்குனாதான் நல்லது. இல்லைன்னா ஆயுதபூஜைதான் போடணும். இவங்க பொருள்கள் மற்றநாட்டு பொருள்களைவிட விலை குறைவு. எப்படி தெரியுமா? சீனாவில் மேனுபாக்சரிங்கிற்கு எந்த வித கட்டுப்பாடுகளும் இல்லை. அரசாங்கத்திடமிருந்தோ, அரசியல் கட்சிகளிடமிருந்தோ அதாவது மாசு கட்டுப்பாட்டு பிரச்னை, தொழிலாளர் பிரச்னை, மின்சாரம் தட்டுப்பாடு, தண்ணீர் தட்டுப்பாடு,மூலப் பொருள் தட்டுப்பாடு ஆகிய எந்தவித தொல்லையும் இல்லை. அதனால் மேனுபாக்சரிங் சுலபமாக கம்மி விலையில் நடக்கிறது. இந்தியாவுல ஒரு காப்பர் தொழிற்சாலை தூத்துக்குடியில் என்னாச்சு? இப்படி மேனுபாக்சரிங் பண்ணுன பொருட்களை வித்தே ஆகணும். பாகிஸ்தான் போல 5/6 நாடுகளை அடிமையாக வச்சிருந்தாலும் ஒன்னும் பி யோசனம் இல்லை. அமெரிக்கா ரஷ்யா போன்ற பெரிய நாடுகளில் வர்த்தகம் நடக்கணும். அதனால இப்படி முட்டிக்கிறாங்க. இந்தமாதிரி "" வூடு கட்டுதல் """ போன்ற வம்படி சண்டை போட்டு ஓய்ந்த பிறகு இருவரும் கை குலுக்கி போஸ் கொடுத்து சண்டையை ஒத்தி வைப்பாங்க. இப்போதைக்கு 1வது 2வது ரவண்டு டிரம்ப் ஜெயிப்பாரு. பிறகு சமாதானம்


subramanian
ஏப் 16, 2025 21:57

உண்மையைத் தேடி வெளிச்சம் போட்டு காட்டி விட்டீர்கள். சபாஷ்.


Srinivasan Krishnamoorthy
ஏப் 17, 2025 07:40

correct observation. Trump is doing right thing for america so that america stands tall in technology and manufacturing. this is new world order.china has to suffer for creating covid like situation in connivance with US pharma lobby and the deep state.china paying the price


V.Mohan
ஏப் 16, 2025 18:35

இந்தமாதிரி "" வூடு கட்டுதல் """ போன்ற வம்படி சண்டை போட்டு ஓய்ந்த பிறகு இருவரும் கை குலுக்கி போஸ் கொடுத்து சண்டையை ஒத்தி வைப்பாங்க. இப்போதைக்கு 1வது 2வது ரவண்டு டிரம்ப் ஜெயிப்பாரு. பிறகு சமாதானம்


raju
ஏப் 16, 2025 17:05

இரு பெரும் ஜனநாயக நாடுகளில் இப்படி இரண்டு தலைவர்கள் .


Barakat Ali
ஏப் 16, 2025 16:45

வர்க்கப்போர் சினிமா, சீரியஸா ஆரம்பிச்சு இப்போ காமெடி டிராக் வந்துருச்சு ....


Balasubramanian
ஏப் 16, 2025 16:15

இதற்கு பதில் அமெரிக்கா சுற்றி ஒரு சீனச் சுவர் எழுப்பி விடுங்கள்!


Anbarasu K
ஏப் 16, 2025 15:26

இரண்டு பெரிய ஆளுகளும் அடிச்சிக்கிட்டு விளையாடுறானுங்க அடுத்தவங்க வாழ்க்கையில எப்ப ரெண்டு பேசி முடிப்பாங்க இன்னு தெரியல


Srinivasan Krishnamoorthy
ஏப் 16, 2025 16:09

china is going to loose us and European market, that is for sure


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை