உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சேமிப்பில் 20% மக்களுக்கே வழங்கலாம்; அதிபர் டிரம்ப் முடிவு

சேமிப்பில் 20% மக்களுக்கே வழங்கலாம்; அதிபர் டிரம்ப் முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: 'எலான் மஸ்க் தலைமையிலான அரசாங்கத் திறன் துறையிலிருந்து 20 சதவீதம் சேமிப்பை அமெரிக்கர்களுக்குத் திருப்பி தரலாம்' என அதிபர் டொனால்டு டிரம்ப் முடிவு செய்துள்ளார்.அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற உடன், டி.ஓ.ஜி.இ., எனப்படும் சிறந்த நிர்வாகத்துக்கான துறை என்ற அரசு சாரா அமைப்பை உருவாக்கினார். அமெரிக்க அரசின் நிர்வாகத்தில் செய்யப்படும் வீண் செலவுகளை தடுப்பது, கணக்குகளை முறைப்படுத்துவது போன்றவற்றுக்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5fgvef8v&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் இதன் தலைவராக உள்ளார். உலகெங்கும் பல நாடுகளுக்கு வழங்கப்படும் நிதி உதவிகளை நிறுத்தி, இந்த அமைப்பு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில்,எலான் மஸ்க் தலைமையிலான அசாங்கத் திறன் துறையிலிருந்து 20 சதவீதம் சேமிப்பை அமெரிக்கர்களுக்குத் திருப்பி கொடுக்கப்படும். 20 சதவீதம் அரசின் கடனை குறைப்பதற்காக ஒதுக்கப்படும் என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இது குறித்து, டிரம்ப் கூறியதாவது: நாங்கள் ஒரு புதிய முடிவு எடுக்க பரிசீலித்து வருகிறோம். அரசாங்கத் திறன் துறையிலிருந்து 20 சதவீதம் சேமிப்பை அமெரிக்க குடிமக்களுக்கு வழங்குகிறோம். மீதமுள்ள 20 சதவீதத்தை கடனை அடைக்கச் முடிவு செய்யப்பட்டுள்ளன. பல பில்லியன் டாலர் சேமிக்கப்படுகின்றன. எனவே 20 சதவீதத்தை அமெரிக்க மக்களுக்குத் திருப்பித் தருவது பற்றி நாங்கள் யோசித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Anantharaman Srinivasan
பிப் 20, 2025 12:35

20 சதவீதம் சேமிப்பை அமெரிக்கர்களுக்குத் திருப்பி தரலாம் என அதிபர் டொனால்டு டிரம்ப் முடிவு செய்துள்ளார். மோடி போல் ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் என்று வாக்குறுதியோடு நிற்காமல், கொடுத்து விட்டால் கொடுத்த பின் பாராட்டலாம்.


Thamizh_Saadhi
பிப் 20, 2025 14:07

அடிச்சி விடு. உனக்கு ஹிந்தி தெரியாது, இதை படிக்குற உ பி ஸுக்கும் ஹிந்தி தெரியாது. ஆனா மோடி ஹிந்தி ல என்ன பேசுனார்னு மட்டும் பளிச்சுனு தெரியுது உனக்கு.. வாங்குன 200 ரூபா எப்படி வேல செய்யுதுடா சாமீ ..


sethu
பிப் 20, 2025 12:20

தீப்பொறி திருமுகம் சுடாலின் முத்துவேல் கருணாநிதியின் மகன் என்ற நான் சொல்லுகிறேன் எந்தக்கொம்பனாலும் குறைசொல்ல முடியாத ஆட்சி இதுனு சொல்லும்போதே தெரிகிறது பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்ட் வீக்குன்னு


ஆரூர் ரங்
பிப் 20, 2025 09:35

வரிவிதிப்பு அதிகரிப்பால் உங்க நாட்டு மக்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள். ஆரம்ப சவடால் வெகு விரைவில் வலுவிழந்துவிடும்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
பிப் 20, 2025 11:06

அநாவசிய செலவினங்களை குறைப்பது மூலம் ஏற்படும் சேமிப்பில் இருந்து 20 சதம் மக்களுக்கும், 20 சதம் கடன்களை அடைபதற்கும், 60 சதம் அரசின் பயன்பாட்டுக்கும் செலுத்துவது நல்ல முடிவு. மேலும் டிரம்ப் உள்நாட்டு விற்பனை வரி விகிதங்களை குறைக்கவும், இறக்குமதிக்கு வரிவிதிப்பை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கிறார். இதுவும் ஓரளவு நல்ல முயற்சியே. வரி விதிப்பில் "தும்பை விட்டு வாலை பிடிக்கும்" வழக்கத்தை மாற்ற முயற்சிக்கிறார். ஓரளவு நமது ஜிஎஸ்டி முறைக்கு ஒப்பானதுதான். வெற்றிபெற சில மாதங்கள் ஆகும்.


Bye Pass
பிப் 20, 2025 08:33

பீகாரில் மதுவிலக்கு அமல்படுத்த நிதீஷுக்கு இருந்த துணிச்சல் திராவிட முதல்வருக்கு இல்லாதது வருத்தம் தருகிறது


Kumar Kumzi
பிப் 20, 2025 10:01

டாஸ்மாக் திருட்டு திமுகவினரின் குடும்ப சொத்து எப்பிடி நிப்பாட்டுவானுங்க


V வைகுண்டேஸ்வரன்
பிப் 20, 2025 14:47

மூட்டை முடிச்சுகளைக் கட்டிண்டு பீகாருக்குப் போயிடுங்கோ. யாரும் தடுக்க மாட்டார்கள். அமெரிக்கா பற்றிய செய்தியில் எதையோ உளறி வெச்சிருக்கு


Oru Indiyan
பிப் 20, 2025 08:18

நம்.நாட்டிலும் ஒரு வேலையும் செய்யாத பல கோடி அரசு தொழிலாளர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும். ஓய்வு ஊதியம் நிறுத்த வேண்டும்


முக்கிய வீடியோ