உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரஷ்யா- உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து புடின், ஜெலன்ஸ்கியுடன் பேசுவேன்: சொல்கிறார் டிரம்ப்

ரஷ்யா- உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து புடின், ஜெலன்ஸ்கியுடன் பேசுவேன்: சொல்கிறார் டிரம்ப்

வாஷிங்டன்: உக்ரைன் போர் குறித்து திங்கட்கிழமை புடினுடன் தொலைபேசியில் பேசுவேன் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.இது தொடர்பாக டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திங்கட் கிழமை காலை 10:00 மணிக்கு, ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புடினிடம் தொலைபேசி மூலம் பேசுவேன். அப்போது, வாரத்திற்கு சராசரியாக 5000க்கும் மேற்பட்ட ரஷ்ய மற்றும் உக்ரைன் வீரர்களைக் கொல்லும், போரை நிறுத்துவது குறித்து பேசுவேன்.பின்னர் நான் உக்ரைனின் அதிபர் ஜெலன்ஸ்கியிடமும், பேசுவேன். இது ஒரு முக்கியமான நாளாக இருக்கும் என்று நம்புகிறேன், ஒரு போர் நிறுத்தம் ஏற்படும். மேலும் இந்த வன்முறை முடிவுக்கு வரும். இவர் அவர் கூறியுள்ளார். ரஷ்யா-உக்ரைன், மூன்று ஆண்டுகளில் முதல் முறையாக நேரடி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திய ஒரு நாளுக்கு பிறகு அதிபர் டிரம்ப் மத்தியஸ்தம் செய்வேன் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

மீனவ நண்பன்
மே 18, 2025 03:39

ரஷ்யாவும் உக்ரேனும் சண்டையில் நீடித்திருந்தால் அமேரிக்கா நிம்மதியா இருக்குமோ ?


மீனவ நண்பன்
மே 17, 2025 23:34

புடின் ட்ரம்பை செந்தில் நிலைமைக்கு கொண்டு வந்துவிட்டார்


Shankar
மே 17, 2025 23:25

ஆமாம்.


v.sankar
மே 17, 2025 23:11

அவர்களின் பிரச்சினையில் தலையிடுவதற்கு நீங்க யார்? உன்னுடைய நாட்டையே சரியாக ஆள தெரியாத உலக கோமாளி நீங்க. எந்த ஒரு பிரச்சினையையும் தீர்ப்பதற்கு திறமையற்றவர் தான் நீங்கள்.


Columbus
மே 17, 2025 23:05

Trump is only the second US President not to have started a new war in his term.


Columbus
மே 17, 2025 23:03

Donald Trump is an American Nationalist. Will do anything if it is in the interest of USA. And the Democratic Party is bent upon ruining USA.


கா. ரவிச்சந்திரன், புதுக்கோட்டை
மே 17, 2025 22:57

இப்படியும் ஒரு கோமாளி அமெரிக்க வரலாற்றிலேயே இதுவரை அதிபராக இருந்ததில்லை.


Nada Rajan
மே 17, 2025 22:36

எது எபப்டியோ போர் நினற்து செளயாயுங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை