உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வராவிட்டால்... ரஷ்யாவுக்கு 50 நாள் கெடு விதித்த டிரம்ப்!

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வராவிட்டால்... ரஷ்யாவுக்கு 50 நாள் கெடு விதித்த டிரம்ப்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: உக்ரைன் போரை 50 நாட்களில் முடிவுக்கு கொண்டு வராவிட்டால் ரஷ்யா மீது கடுமையான வரிகள் விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.இது குறித்து அதிபர் டொனால்டு டிரம்ப் நிருபர்களிடம் கூறியதாவது: புடினின் போர் நடத்தை ஏமாற்றம் அளிக்கிறது. அடுத்த 50 நாட்களுக்குள் உக்ரைன் உடன் போர் நிறுத்தத்திற்கு புடின் ஒப்புக் கொள்ளாவிட்டால் ரஷ்யா மீது கடுமையான வரிகள் விதிக்கப்படும்.நாங்கள் 2ம் கட்ட வரிகளை விதிக்க திட்டமிட்டு வருகிறோம். எங்களுடன் ஒப்பந்தம் ஏற்படவில்லை என்றால் வரி 100 சதவீதம் விதிக்கப்படும். ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனை ஆதரிக்க நேட்டோவிற்கு அமெரிக்கா அனுப்பும் ஆயுதங்களில் பேட்ரியாட் ஏவுகணை அமைப்புகள் மற்றும் பேட்டரிகள் இருக்கும். புடின் அமைதி பற்றிப் பேசினார், ஆனால் உக்ரைன் நகரங்களைத் தொடர்ந்து தாக்கினார். இவ்வாறு டிரம்ப் கூறினார்.

புடினாக இருந்தால்....!

வெள்ளை மாளிகையில் பேச்சுவார்த்தைக்காக, டொனால்டு டிரம்புடன் இணைந்த நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட், ''நான் புடினாக இருந்தால் அமெரிக்க அதிபரின் எச்சரிக்கையைப் பற்றி யோசித்திருப்பேன்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Ramesh Sargam
ஜூலை 15, 2025 13:09

இந்த ரஷ்யா அதிபர் புடின் இருக்காரே, அவர் காலைல நன்றாக பேசுகிறார். ஆனால் சாயங்காலம் ஆனால் உக்ரைன் மீது குண்டு போடுகிறார். அவரைப்பற்றி என்னால் சரியாக புரிந்துகொள்ள முடியவில்லையே.


Sundararaj k
ஜூலை 15, 2025 11:22

உலகின் அனைத்து நாடுகள் சேர்ந்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் தொடர்பு பிற உற்பத்தி பொருட்களை வாங்க வேண்டாம். உறவுகளையும் நடப்புகளையும் மறந்து விடுங்கள்.இந்த இரு நாட்டவர்கள் இல்லை என்றால் உலகின் மற்ற நாட்டினர் இறந்து விடுவார்களா.அல்லது வாழ்வே முடியாதா.


saravan
ஜூலை 15, 2025 11:21

உலக வரிவிதிப்பு முதலாளி வந்தியிட்டாருப்பா


ஆரூர் ரங்
ஜூலை 15, 2025 11:11

இஸ்ரேல் மனது வைத்தால் புடினுக்கு முடிவு கட்ட முடியும். டிரம்ப் அமெரிக்காவால் இயலாது. நல்லதே நடக்கட்டும்.


ASIATIC RAMESH
ஜூலை 15, 2025 09:28

பார்த்து... எல்லா நாடுகளையும் உங்கள் வரிவிதிப்பை வைத்து மிரட்டலாம் என்று தன்னிச்சையாக முடிவெடுத்தால்... எல்லா நாடுகளும் உங்களுக்கு எதிராக திரும்பினால் என்ன ஆகும்... அமெரிக்கா... அதோகதிதான்... முதலில் இந்த பெரியண்ணன் என்ற நினைப்பை தூக்கி எறிந்துவிட்டு உங்கள் நாட்டில் உள்ள துப்பாக்கி கலாச்சாரம் போன்றவற்றை சரிசெய்யுங்க.. முதல்ல துப்பாக்கி விக்கிறவங்க வாங்குறவங்களுக்கு 1000 மடங்கு வரி போடுங்க..


ஜெய்ஹிந்த்புரம்
ஜூலை 15, 2025 08:17

மனசு வெச்சாதான் போர் முடியும். இது தெரியால் டிரம்பு சலம்புகிறார்.


RAJ
ஜூலை 15, 2025 08:04

அண்ணே ... புடின் ஒன்னும் பக்கிஸ்தான் அதிபதி இல்லை....நீங்க சொல்றதுக்கு எல்லாம் மண்டைய ஆட்ட .. இந்த போருக்கு காரணம் உனக்கு தெரியத்தானே . ..


Ravi
ஜூலை 15, 2025 07:56

முதலில் உக்ரைனுக்கு ஆயுதங்களை கொடுத்து போர் செய்ய தூண்டிவிடும் போக்கை அமெரிக்கா ஐரோப்பா நாடுகள் கைவிட்டால் போர் நிறுத்த 50 நாள் எதற்கு 5நாள் போதும் ரஷ்யாவுக்கு...


SUBBU,MADURAI
ஜூலை 15, 2025 07:41

கங்கா சந்திரமுகியா மாறியது போல் ...


v j antony
ஜூலை 15, 2025 07:33

எந்த அடிப்படை காரணங்களும் நோக்கங்களும் இல்லாமல் வெறுமனே அனுமானத்தின் பெயரில் இரு நாடு தலைவர்களும் தங்கள் ஈகோ விற்க்காக போரிட்டு வருகின்றனர் அப்பாவி மக்கள் இதில் வேடிக்கை தான் பார்க்கின்றனர் இனி அவர்கள் வெகுண்டெழுந்தால் மட்டுமே போர் முடிவடையும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை