உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியாவுக்கு எதிராக எதிர்மறையான டிரம்ப்பின் செயல்பாடுகள்; பின்னணியில் பாகிஸ்தானா? முன்னாள் பென்டகன் அதிகாரி சந்தேகம்

இந்தியாவுக்கு எதிராக எதிர்மறையான டிரம்ப்பின் செயல்பாடுகள்; பின்னணியில் பாகிஸ்தானா? முன்னாள் பென்டகன் அதிகாரி சந்தேகம்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்பின் திறமையின்மையால் இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான உறவு வலுப்பெற்று வருவதாக முன்னாள் பென்டகன் அதிகாரி மைக்கேல் ரூபின் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது; அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான உறவு பாதிக்கும் வகையிலான அதிபர் டிரம்பின் செயலால் அமெரிக்கர்கள் திகைத்து போயுள்ளனர். டிரம்பின் இந்த செயல் மக்களுக்கு பல்வேறு கேள்விகளை எழச் செய்கிறது. ஒருவேளை பாகிஸ்தானின் மிகையான புகழ்ச்சியா? அல்லது பாகிஸ்தானியர்கள் அல்லது துருக்கி மற்றும் கத்தாரில் உள்ள அவர்களின் ஆதரவாளர்கள் டிரம்பிற்கு லஞ்சம் கொடுத்திருக்கலாமோ? என்ற சந்தேகம் எழுகிறது.இது ஒரு பேரழிவு தரும் லஞ்சமாகும். இனி வரும் ஆண்டுகளில் அமெரிக்காவை ஒரு ராஜதந்திர சிக்கலில் சிக்க வைக்கும். அமெரிக்க அதிபர் டிரம்பின் திறமையின்மையால் இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான உறவு வலுப்பெற்று வருகிறது. இந்திய நலன்களை பிரதிநிதித்துவப்படுத்த இந்திய மக்கள் பிரதமர் மோடியை தேர்வு செய்துள்ளனர் என்பதை அமெரிக்கர்கள் புரிந்து கொள்ளவில்லை. இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட நாடு. விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறப் போகிறது. அதற்கு ஆற்றல் தேவை. அமெரிக்கா கபடத்தனமாக செயல்படுகிறது. ஏனெனில் நாம் ரஷ்யாவிடம் இருந்து நிறைய பொருட்களை கொள்முதல் செய்கிறோம். காரணம், மாற்று சந்தைகள் இல்லாதது தான். இந்தியாவுக்கு பாடம் எடுப்பதற்கு பதிலாக இந்தியாவுக்கு மலிவான விலையில் எரிபொருளை வழங்க வேண்டும். ஏனென்றால், இந்தியாவுக்கு முதலில் தங்களின் பாதுகாப்பே முக்கியம், இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

R Dhasarathan
டிச 07, 2025 07:55

தன் நிறுவனத்தின் நலமே பெரியது எனும் வியாபாரியை ஆட்சியில் அமர வைத்தால் என்ன ஆகும் என்று உலகிற்கு காட்டிவிட்டார். நாட்டின் நலன் முன் வியாபாரம் ஒன்றுமில்லை என்று இன்னமும் புரிந்ததாக தெரியவில்லை...


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ