உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் மனைவி காசாவிலிருந்து தப்பி துருக்கியில் மறுமணம்

கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் மனைவி காசாவிலிருந்து தப்பி துருக்கியில் மறுமணம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெருசலேம்: ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் கொல்லப்பட்ட தலைவர் யாஹ்யா சின்வரின் மனைவி போலி பாஸ்போர்ட் மூலம் காசாவில் இருந்து தப்பி துருக்கி சென்று, அங்கு மறுமணம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. போலி பாஸ்போர்ட் மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள- ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே, 2023 அக்டோபரில் இருந்து போர் நடந்து வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6d0kh7p9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதிகளை ஒவ்வொருவராக இஸ்ரேல் கொன்றது. அந்த வகையில் க டந்த ஆண்டு அக்டோபர் 16ல் ஹமாஸ் தலைவராக இருந்த யாஹ்யா சின்வர், துல்லிய தாக்குதலில் கொல்லப்பட்டார். இஸ்ரேல் மீதான தாக்குதலில் இவர் மூளையாகச் செயல்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் கொல்லப்படுவதற்கு முன், அவரது மனைவி சமர் முகமது அபு ஸாமர், காசாவைச் சேர்ந்த வேறொரு பெண்ணின் பாஸ்போர்ட் மூலமாக, குழந்தைகளை அழைத்துக் கொண்டு துருக்கி சென்றது தெரிய வந்துள்ளது. இது குறித்து, இஸ்ரேலின் ஒய்நெட் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: யாஹ்யா சின்வர் கொல்லப்படுவதற்கு முன், அவரது மனைவி தன் குழந்தைகளுடன் துருக்கி சென்று விட்டார்; இதற்காக போலி பாஸ்போர்ட் பயன்படுத்தி உள்ளார். தேவையான உதவி அவருக்கு, ஹமாஸ் அரசியல் பிரிவைச் சேர்ந்த மூத்த அதிகாரி பதி அகமது தேவையான உதவிகளை செய்து தந்தார். இதே போன்று யாஹ்யா சின்வருக்கு பின் ஹமாஸ் தலைவராகி கொல்லப்பட்ட அவரது தம்பி முகமதுவின் மனைவி நஜ்வாவும் துருக்கி தப்பி சென்றுள்ளார். இதில், யாஹ்யா சின்வரின் மனைவி மறுமணம் செய்து கொண்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Ganesun Iyer
ஜூலை 28, 2025 14:04

பிளான் எ தோத்துட்டா.. பி..சி ரெடி..


Barakat Ali
ஜூலை 28, 2025 12:58

கணவன் இறந்த துக்கம் அகல மறு சல்லாபமே தீர்வு????


N.Purushothaman
ஜூலை 28, 2025 14:33

...இனியாவது அவர்களின் வாழ்க்கையில் அமைதியும் பாதுகாப்பும் அமையட்டும் ...


Rathna
ஜூலை 28, 2025 12:22

இஸ்ரேல் செயற்கை நுண்ணறிவு மூலம் தீவிரவாத நபர்களின் போன் இருப்பிடம் மூலம், சென்சார்கள் மூலம், மற்றய உளவு வேலை மூலம் அவர்களின் இடங்களை கண்டு அறிந்து துல்லியமாக குண்டு போடுகிறது. காசா குழந்தைகள் பிறப்பு குறையவில்லை ஆனால் அவர்கள் வாரத்திற்கு ஒரு முறை கஞ்சி கிடைக்குமா என்று அலையும் நிலை உள்ளது.


M Ramachandran
ஜூலை 28, 2025 12:18

குளிருக்கு இதம் தேவைய்ய படும். . ஜென்மம் எடுப்பது இன பெருக்கத்திற்காக தான் சிலர் நினைப்பதுண்டு.


Rathna
ஜூலை 28, 2025 12:18

பிள்ளையை பெற்று தீவிரவாதத்திற்கு கூட்டத்தை சேர்ப்பது தலையாய கடைமை


Anand
ஜூலை 28, 2025 10:53

இஸ்ரேலுக்கு தெரியாமல் தப்பிக்க வாய்ப்பில்லை, இவனுங்களோட இருந்து சீரழிவதை விட வேறு எங்காவது போய் நல்லபடியாக வாழட்டும் என விட்டிருப்பர்.


N.Purushothaman
ஜூலை 28, 2025 08:26

போராளியின் ??? விதவை மனைவியாக வாழ்வதை விட தன்னுடைய மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அந்த பெண்மணி அப்படி ஒரு முடிவு எடுத்து இருக்கலாம் ...அவர் துருக்கி சென்றது இஸ்ரேலின் திட்டமாக கூட இருக்கலாம் ...ஏனெனில் இரு நாடும் வர்த்தக ரீதியாக நல்ல நட்புறவை கொண்டுள்ளன ...


RK
ஜூலை 28, 2025 06:49

கலாச்சார சீரழிவு, ஒருவனுக்கு ஒருத்தி என்பதே கிடையாது. எல்லாம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் குழந்தைகளை பெற்று தள்ளுவது. குழந்தை திருமணம் அதிகம். பெண்கள் அடிமைகளாக கல்வியும் கொடுப்பதில்லை. மொத்தத்தில் உற்பத்தி சாதனம் கதறல் அமைதி மார்க்கத்திற்கு.


VSMani
ஜூலை 28, 2025 11:03

மொத்தத்தில் உற்பத்தி சாதனம் கதறல்???


visu
ஜூலை 28, 2025 06:21

அவங்க வேலை குழந்தை பெற்று தள்ளுவது 2023 இலிருந்து போர் நடக்குது உணவில்லை தண்ணீரில்லை இடமில்லை என்கிறார்கள் ஆனால் குழந்தை பிறப்பு குறையவில்லை


Kasimani Baskaran
ஜூலை 28, 2025 04:13

இந்தியா பாக்கிஸ்தானிலுள்ள கட்டிடத்தை துல்லியமாக தாக்கினால் இஸ்ரேல் ஒருவரது உடல் பாகங்களைக்கூட துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை படைத்தது...


Senthoora
ஜூலை 28, 2025 06:51

அதுக்கு இஸ்ரேலுக்கு பல வருடங்கள் வேண்டும், இப்போ இஸ்ரயேலில் ஒவொரு பல்லு புடுங்கப்படுகிறது.


பேசும் தமிழன்
ஜூலை 28, 2025 09:04

இஸ்ரேல் பல் பிடுங்கப்படுகிறதா.... இல்லை ஹமாஸ் தீவிரவாதிகள் பல் பிடுங்கப்பட்டு அழிக்கப்படுகிறார்களா ???


Anand
ஜூலை 28, 2025 11:02

போலி ஹிந்து பெயரில் ஊளையிடுவது yen?


முக்கிய வீடியோ