உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / டிரம்ப் பெயரை நோபல் பரிசுக்கு பரிந்துரைப்பேன்; கண்டிஷன் போட்ட ஹிலாரி கிளிண்டன்

டிரம்ப் பெயரை நோபல் பரிசுக்கு பரிந்துரைப்பேன்; கண்டிஷன் போட்ட ஹிலாரி கிளிண்டன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் பெயரை நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்வோம் என்று முன்னாள் அதிபர் கிளிண்டன் மனைவி ஹிலாரி கிளிண்டன் கூறி உள்ளார். உலக நாடுகள் எதிர்பார்த்த ரஷ்ய அதிபர் புடின், அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை அலாஸ்காவில் நடைபெற்றது. கிட்டத்தட்ட 3 மணி நேரம் நீடித்த இப்பேச்சுவார்த்தையில் எவ்வித முடிவுகளும் எட்டப்படவில்லை. விரைவில் இரு தரப்பு இடையே மீண்டும் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந் நிலையில், அதிபர் டிரம்ப் பெயரை நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்வோம் என்று முன்னாள் அதிபர் கிளிண்டன் மனைவி ஹிலாரி கூறி உள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால் நோபல் பரிசுக்கு நான் டிரம்ப் பெயரை பரிந்துரைப்பேன். ஆனால் அவர் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அப்படி அவர் செய்தால் நானே அவரது (டிரம்ப்) பெயரை பரிந்துரை செய்வேன். போரை அவர் முடிவுக்கு கொண்டு வர இதுவே (அலாஸ்கா பேச்சு வார்த்தை) சரியான தருணம். அங்கு ஒரு குண்டு வீசும் சத்தம் கூட கேட்கக்கூடாது. போர் விவகாரத்தில் புடினுக்கு எவ்வித முக்கியத்துவமும் கிடைத்துவிடக்கூடாது என்பதே எனது குறிக்கோள்.இவ்வாறு ஹிலாரி கிளிண்டன் கூறி இருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Santhakumar Srinivasalu
ஆக 16, 2025 19:12

வரி மேல் வரி விதித்து உலக நாடுகளை பெரியண்ணன் பாணியில் மிரட்டும் கிறுக்கனுக்கு நோபல் பரிசா? அந்த பரிசை கேவலப்படுத்தாதீர்!


Rajan A
ஆக 16, 2025 19:01

அங்கே வெயில் அதிகமோ?


Devaraju
ஆக 16, 2025 16:40

Both of you stupid


Ravi Chandran K, Pudukkottai
ஆக 16, 2025 16:35

1999 ல் இந்திய பாகிஸ்தான் கார்கில் யுத்தத்தின் போது இந்தியா பாகிஸ்தான் இரு நாட்டு தலைவர்களையும் தொடர்பு கொண்டு யுத்த நிறுத்தம் ஏற்பட மார் தட்டிக் கொள்ளாமல் தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற் கொண்டார் அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளின்டன். அப்பவெல்லாம் கிழவி சமையலறையில் இருந்து விட்டு சொந்த புருசனுக்கு அப்ப நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யாமல் இப்ப வந்து நோபல் பரிசு, நோபல் பரிசு என புலம்பி வரும் ஒரு மன நோயாளிக்கு போய் பரிந்துரை செய்யுதாம். போ போய் பி.பி, சுகர் மாத்திரைய ஒழுங்கா சாப்பிடு.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஆக 16, 2025 14:05

You too Hillary.....


SUBRAMANIAN P
ஆக 16, 2025 13:48

கிளிண்டன் மனைவியையும் விடவில்லை போல ட்ரம்ப்.


ramesh
ஆக 16, 2025 13:13

அரசியல் கோமாளிகளுக்கான நோபல் பரிசு கொடுக்கலாம்


Dv Nanru
ஆக 16, 2025 12:43

நீங்க யாரும் அதுவும் அமெரிக்கர்கள் எந்த கண்டிஷன்னும் தி கிரேட் லீடர் தாவரிஷி புட்டினுக்கு போடமுடியாது அப்படி போட்டாலும் அவர் ஒத்துக்கொள்ள மாட்டார் அவரு வேணும்ன்னா உங்களுக்கு கண்டிஷன் போடுவார் அதை நீங்கள் தான் ஒத்துக்கொள்ள வேண்டும் அமெரிக்காவுக்கும் உக்ரைனுக்கும் என்ன சம்பந்தம் அமெக்கா எங்கே இருக்கு உக்ரைன் எங்கே இருக்கு தேவை இல்லாமல் ஏன் அமேரிக்கா தலையீடுது கட்ட பஞ்சயாத்து பண்ணுது உங்க வேலையை நீங்க பாருங்க புட்டினுக்கு தெரியும் எதை எப்படி கையாளவேண்டும் என்று நீங்க உக்ரைன் கனிம வளங்களை சுரண்டுவதற்கு பாக்கிறிங்க அது புடின் இருக்கும் வரை அது நடக்கவே நடக்காது சீனா ஏற்கனவே ஏற்றுமதி நிறுத்திவிட்டது அதனால் உங்களுடைய போர் தளவாடங்கள் உற்பத்தி முற்றிலும் நின்று விட்டது அதனாலே சந்துஅடி வேளையில் சிந்தித்து பாடநினைக்கிறார் ட்ரம்ப் அது ட்ரம்ப் காணும் பகல்கனவு தான் . ட்ரம்ப் நினைத்தால் விலை கொடுத்து நோபல் பரிசு வாங்கலாம் ஆனா அதுவா கிடைக்காது அவ்வளவு தியாகம் செய்து இருக்கார் ..


Anand
ஆக 16, 2025 10:28

என்னடா இது கருமம், இவரும் கூவ ஆரம்பித்துவிட்டார்.


Lakshmanan
ஆக 16, 2025 09:32

நாசிசப்பன் ண்பாத்திர கடை கப் ஒன்னு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை