உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கர்ப்பமடைந்ததே தெரியவில்லை; திடீரென குழந்தை பெற்ற பெண்

கர்ப்பமடைந்ததே தெரியவில்லை; திடீரென குழந்தை பெற்ற பெண்

கான்பெர்ரா: ஆஸ்திரேலியாவில், இளம்பெண் ஒருவர், தான் கர்ப்பமாக இருப்பதை அறிந்த 17 மணி நேரத்தில் குழந்தையை பிரசவித்த அரிதான சம்பவம் நடந்துள்ளது.ஆஸ்திரேலியாவின் கான்பெர்ராவைச் சேர்ந்த சார்லோட் சம்மர்ஸ், 20, என்ற இளம்பெண், அலர்ஜி எனப்படும் ஒவ்வாமை பிரச்னைக்காக டாக்டரிடம் சென்றுள்ளார்.அவரை பரிசோதித்த டாக்டர், கர்ப்ப பரிசோதனை செய்யுமாறு கூறியுள்ளார். இதை நம்பாத சார்லோட், டாக்டர் கூறிவிட்டாரே என பரிசோதனை செய்தபோதுதான், கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. மேலும் சிக்கல் இருந்ததால், உடனடியாக பிரசவத்துக்கு ஏற்பாடு செய்தனர். அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தன் காதலனுடன் திருமணம் செய்வதற்காக சில மாதங்கள் முன் தான் இரு குடும்பத்தாரும் பேசியுள்ளனர்.தான் முன்னெச்சரிக்கையாக இருந்ததாகவும், மாதவிடாய் வழக்கமாக இருந்ததாகவும் டாக்டர்களிடம் அந்தப் பெண் கூறியுள்ளார்.இது 'கிரிப்டிக்' கர்ப்பம் எனப்படும் அரியவகை கர்ப்பம் என டாக்டர்கள் கூறியுள்ளனர்.'கருப்பையில், தொப்புள் கொடிக்கு பின்னால் குழந்தை மறைந்திருக்கும். இதனால், கர்ப்பம் தரித்தது கூட தெரியாது. மாதவிடாயும் வழக்கம் போல் இருக்கும்.'உடலிலும் பெரிய அளவில் எந்த மாற்றமும் தெரியாது. இது மிகவும் அபூர்வமாக ஏற்படக் கூடியது' என, டாக்டர்கள் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

P Karthikeyan
ஜூலை 15, 2025 08:54

இதுல எங்க குஜராத் மாடல் வந்தது ..தேச விரோத கூட்டம் தப்பாவே யோசிக்குது


nisar ahmad
ஜூலை 15, 2025 08:51

லட்சக்கணக்கான ஊழல் செய்தும் கண்டுபிடிக்க முடியாமல் திறமையோடும் பிரதமர் நிவாரனநிதிக்கு கணக்கு காட்டமுடியாதென்று திமிறாக கூறுவதும் 251 ரூபாய்க்கு மொபைல் தருவதாக விளம்பரம் செய்து கொள்ளையடித்ததும் போல சங்கிகளின் செயலாக தான் இருக்கும் அங்கும் தன் கைங்கரியத்தை காட்டியிருப்பார்களோ


Azar Mufeen
ஜூலை 15, 2025 08:00

குஜராத் மாடல்னா சும்மாவா


Yuvaraj Velumani
ஜூலை 15, 2025 08:54

அது பாக்கிஸ்தான் திருட்டு மாடல் உண்ட வீட்டுக்கு விஷம் வைப்பது உன் குரூப்


Naga Subramanian
ஜூலை 15, 2025 06:44

அங்கும் திராவிட மாடலா என்ன ஒரு அதிசயம்


Barakat Ali
ஜூலை 15, 2025 05:39

தாயறியாத சூலுண்டோ ன்னு தமிழ்ல சொல்வழக்கே இருக்குங்காணும் .....


Mani . V
ஜூலை 15, 2025 03:59

நம்பிட்டேன்.


மூர்க்கன்
ஜூலை 15, 2025 03:56

இது ஒரு வியாதி? தியாகு? மன நல சிகிச்சை எடுத்தல் நலம்.


தியாகு
ஜூலை 15, 2025 03:26

ஆஸ்திரேலியாவில் குடியேறிய கட்டுமர திருட்டு திமுகவின் உடன்பிறப்பு எவனாவது இந்த வேலையை செய்திருக்க வாய்ப்புகள் அதிகம். ஏன்னா, திருட்டு செயல்கள் செய்யும் போது யாரும் கண்டுபிடிக்க முடியாதபடி செய்த தடம் தெரியாமல் திருட்டு வேலைகள் செய்வதில் உலகத்திலேயே திமுகவின் உடன்பிறப்புகளுக்கு மட்டுமே அசாத்திய திறமை உண்டு,


Kasimani Baskaran
ஜூலை 15, 2025 03:49

கட்டுமரம் அங்குமா... ஆண்டவா.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை