மேலும் செய்திகள்
அன்னாசி பழ கேசரியை சுவைப்போமா!
14-Feb-2026
- நமது நிருபர் -: இனிப்பு என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர். ரம்ஜான் நோன்பு காலத்தில், பல ரம்ஜான் இனிப்பு வகைகள் விற்கப்படும். அந்த வகையில் இந்தாண்டு ரம்ஜானுக்கு வீட்டிலேயே எளிய முறையில் சுவையான மக்கான் கீர் செய்யலாம். தேவையான பொருட்கள்: மக்கான் (தாமரை விதை) - 100 கிராம் பால் - 500 மில்லி சர்க்கரை - 50 கிராம் ஏலக்காய் துாள் - அரை தேக்கரண்டி முந்திரி - 10 முதல் 12 பொடியாக நறுக்கியது பாதாம் - 10 முதல் 12 பொடியாக நறுக்கியது நெய் - 1 ஸ்பூன் செய்முறை முதலில் மக்கானை வாணலியில் நெய்யில் வறுத்து எடுத்து, தனியாக ஒரு பாத்தரத்தில் வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பாலை கொதிக்க வைத்து, அதில் வறுத்த மக்கானை சேர்க்கவும். இந்த பால் கெட்டியாகும் வரை, நன்றாக கொதிக்க விடவும். கொதி வந்ததும் அடுப்பை மீடியமில் வைத்து, சர்க்கரை, ஏலக்காய் துாள் சேர்த்து நன்றாக கலக்கவும். கடைசியாக முந்திரி, பாதாமை சேர்த்து கலக்கி இறக்கினால், சுவையான மக்கான் கீர் தயார். இதனை சூடாகவும் அல்லது குளிர்வித்தும் சாப்பிடலாம்.
14-Feb-2026