உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஆற்றின் நடுவில் ஆபத்தை உணராமல் பயணிக்கும் மக்கள்...

ஆற்றின் நடுவில் ஆபத்தை உணராமல் பயணிக்கும் மக்கள்...

கோவை நஞ்சுண்டாபுரம் அருகே நொய்யல் ஆற்றில் தரைப்பாலம் உள்ளது. இந்த பாலத்தை வெள்ளலுார், போத்தனுார் செல்லும் ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அந்த தரை பாலத்துக்கு முறையான அனுமதி இல்லாததால் அதை இடிக்க உத்தரவிடப்பட்டது. இதற்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இடிக்கும் பணி நிறுத்தப்பட்டது. மழைக்காலங்களில் தரை பாலத்தை பொது மக்கள் பயன்படுத்த முடியாது என்பதால் 6 கி.மீ. துாரம் சுற்றி செல்ல வேண்டியுள்ளது. முறையான பாலம் வசதி இல்லாததால் அவதிப்படும் பொது மக்களின் மனக்குமுறல்களை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

நவ 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !