நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறுமா? விவசாயிகள் கவலை...
கோவை மாவட்டம் வடக்கலுார் ஊராட்சியில் விவசாயம் பிரதானமாக உள்ளது. ஆனால் இங்கு மின்சாரம் சப்ளை செய்வதில் முக்கிய பிரச்னை உள்ளது. வடக்கலுாருக்கு 15 கி.மீ. துாரத்தில் உள்ள பெத்திக்குட்டை என்ற இடத்தில் இருந்து மின்சப்ளை கொடுக்கப்படுகிறது. இதனால் மின் சப்ளை சீராக இல்லாமல் இருப்பதால் விவசாயிகளின் மின் மோட்டார்கள் பழுதடைகின்றன. அதிகாலை 2 மணிக்குத் தான் மும்மனை மின்சாரம் அளிக்கப்படுவதால் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே 2 கி.மீ. துாரத்தில் உள்ள பசூர் ஊராட்சியில் இருந்து மின்சாரம் அளிக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
நவ 13, 2025