கர்ப்பிணிகளை ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்த டுபாக்கூர் டாக்டர்
கர்ப்பிணிகளை ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்த டுபாக்கூர் டாக்டர் | Salem | Fake doctor who conducted | male or female tests arrested சேலம் மாவட்டம் வாழப்பாடி பேளூரில் சட்ட விரோதமாக கருவில் இருக்கும் பாலினம் குறித்து ஒரு வீட்டில் வைத்து டுபாக்கூர் டாக்டர் ஒருவர் பணம் வாங்கிக் கொண்டு பரிசோதனை செய்வதாக மாவட்ட சுகாதார பணிகள் நல இணை இயக்குனர் டாக்டர் நந்தினிக்கு புகார் வந்தது. தொடர்நது ஸ்பாட்டுக்கு விரைந்த மருத்துவக் குழுவினர் பேளூரில் வீடு வீடாக சோதனையில் ஈடுபட்டனர். ஒரு வீட்டில் 3 கர்ப்பிணிகளுக்கு வெங்கடேசன் மற்றும் அவரது உதவியாளர் ஆகியோர் குழந்தை பாலினம் கண்டறியும் ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்து கொண்டிருந்தார். அவர்களை மருத்துவக்குழுவினர் கையும் களவுமாக பிடித்து விசாரித்தனர். அந்த டுபாக்கூர் டாக்டர், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை சேர்ந்த வெங்கடேசன் வயது 44, மற்றும் செயல்பட்டு விலாரி பாளையத்தை சேர்ந்த லதா உதவியாளராக செயல்பட்டதும் தெரிந்தது. இருவரையும் வாழப்பாடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். இருவரையும் கைது செய்து வாழப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.