ஆட்சியில் பங்கு கொடுங்க; இல்லனா 5 கொடுங்க |DMK |Congress |DMK Alliance |2026 Elections | CM Stalin
நீண்டகாலமாக காங்கிரசுடன் கூட்டணி அமைத்து வென்று தான் திமுக ஆட்சி அமைத்தது. 2006ல் திமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்காமல், காங்கிரசின் 34 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன்தான் ஆட்சி அமைத்தது. ஆனாலும் காங்கிரசுக்கு அமைச்சரவையில் எப்போதும் பங்கு தரவில்லை. இந்த சூழலில் 2026 சட்ட சபை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சை திமுகவும், காங்கிரசும் துவக்கி உள்ளன. முதல்வர் ஸ்டாலினுடன் முதல் கட்ட பேச்சு நடத்தி உள்ளனர். பீகாரில் காங்கிரஸ் படு தோல்வி அடைந்ததால் அக்கட்சிக்கு சென்ற தேர்தலில் ஒதுக்கிய 25 தொகுதிகளை கொடுத்தால் போதும் என திமுக நினைக்கிறது. ஆனால் காங்கிரஸ் மேலிடமோ அடுத்த ஆண்டு தேர்தலிலும் திமுக வெற்றி பெற்றால் ஆட்சியில் பங்கு தராது என தெரியும். லோக்சபா தேர்தலில் நான்கில் ஒரு பங்கு தொகுதியை எங்களுக்கு ஒதுக்கினீர்கள். அதுபோல ராஜ்யசபாவிலும் நான்கில் ஒரு பங்கு அதாவது 18க்கு நான்கு அல்லது ஐந்து தொகுதிகளை தர வேண்டும். ஆட்சியில் பங்கு தராவிட்டால் இதை தர வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளனர். அதிர்ச்சி அடைந்த திமுக மேலிடம், அது சாத்தியமில்லை என கூறியுள்ளது. ஆனாலும் காங்கிரஸ் விடுவதாக இல்லை.