உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தியாகராஜன், மூர்த்தி, தளபதி யார் கை ஓங்கும் | Madurai meyor Indrani resign | ADMK Councilors

தியாகராஜன், மூர்த்தி, தளபதி யார் கை ஓங்கும் | Madurai meyor Indrani resign | ADMK Councilors

மதுரை மாநகராட்சியில் சொத்து வரி வசூலில் முறைகேடு நடப்பதாக புகார்கள் எழுந்தன. மாநகராட்சி முன்னாள் கமிஷனர் தினேஷ் குமார் விசாரணை நடத்தினார் இதில் 2022 முதல் 2023 வரை மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்தது தெரியவந்தது. அதிகாரிகளின் ஆபிஸ் பாஸ்வேர்டை முறைகேடாக பயன்படுத்தி சொத்து வரியை குறைத்து கணக்கீடு செய்து மாநகராட்சிக்கு 150 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுத்தியது தெரியவந்தது. இந்த ஊழலில் தொடர்புடைய மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த், வரி விதிப்புக்குழு தலைவர் கண்ணன், ஒப்பந்த ஊழியர் செந்தில் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த முறைகேடு தொடர்பாக மண்டல தலைவர்களாக இருந்த வாசுகி, சரவண புவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ் சர்மா, சுவிதா, நகரமைப்பு குழு தலைவர் மூவேந்திரன், வரி விதிப்பு குழு தலைவர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இந்நிலையில் மதுரை மேயர் இந்திராணி நேற்று முன் தினம் ராஜினாமா செய்தார். இந்நிலையில்இன்று துணை மேயர் நாகராஜன் தலைமையில் மதுரை மாநகராட்சி அவசர கூட்டம் நடந்தது கூட்டம் தொடங்கிய 5 நிமிடத்தில் இந்திராணியின் ராஜினாமா தொடர்பான தீர்மானம் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதிமுக கவுன்சிலர்கள், மேயரின் ராஜினாமா ஏற்பு எங்களுக்கு கிடைத்த வெற்றி என முழக்கமிட்டனர். புதிய மேயர் தேர்வுக்கான ஆலோசனை நடக்கும் என எதிர்பார்க்கப்பட நிலையில் ஐந்தே நிமிடத்தில் கூட்டம் முடிக்கப்பட்டதற்கு அதிமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அக் 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ