பாக். முன்னாள் பிரதமர் இம்ரானை சிறையில் சந்தித்த சகோதரி: அடியாலா சிறை நிர்வாகம் மீது குற்றச்சாட்டு
#ImaranKhan| #AdialaJail| #Pakistan| #PakistanPolitics| பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான இம்ரான் கான், அரசியலிலும் களம் இறங்கி சாதித்தார். பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் என்ற கட்சியை துவங்கிய இம்ரான், தேர்தலில் வென்று அந்நாட்டு பிரதமராகவும் பதவி வகித்தார். இவரது ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இவர் ஆட்சிக் கட்டிலை விட்டு இறங்கியதும், இம்ரான் கான் மீது தேச துரோக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. பல்வேறு வழக்குகளை சந்தித்த இம்ரான் கான், 2023ல் அடியாலா சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இம்ரான் கானுக்கு பல கொடுமைகள் நடப்பதாக தகவல்கள் கசிந்தன. இதையடுத்து, அவரது ஆதரவாளர்கள், கட்சித் தொண்டர்கள், உறவினர்கள் என பல்வேறு தரப்பினரும், இம்ரானை சந்திக்க அனுமதி கோரி சிறை நிர்வாகத்திடம் மனு அளித்தனர். ஆனால், இம்ரானை சந்திக்க யாருக்கும் அனுமதி கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் சிறையிலேயே இம்ரான் கான் கொல்லப்பட்டதாகவும், அவரது உடலை வேறு இடத்திற்கு மாற்றும் நடவடிக்கையில் சிறைத்துறை ஈடுபட்டுள்ளதாகவும் சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.