துபாயில் தமிழக சமூக சேவகிக்கு விருது
துபாய் : துபாய் அல் நக்தா பகுதியில் உள்ள லேவண்டர் ஓட்டலில் அமீரக தமிழ் தொழில்முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் 17 வது வர்த்தகர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் பால் பிரபாகர் தலைமை வகித்தார்.இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மலையரசன் சமூக சேவைக்கான விருதை ஜாஸ்மின் அபுபக்கருக்கு வழங்கி கவுரவித்தார்.அமீரக மத்திய தேசிய கவுன்சில் முன்னாள் உறுப்பினர் டாக்டர் சலெம் அல் நார், பல்கேரிய நாட்டின் வர்த்தக பிரதிநிதி வேலண்டின் ஸ்டோவ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.- துபாயில் இருந்து நமது தினமலர் செய்தியாளர் காஹிலா .