உள்ளூர் செய்திகள்

ஷார்ஜாவில் இந்திய சமூகத்தினரின் சார்பில் அமீரக தேசிய தின கொண்டாட்டம்

ஷார்ஜா : ஷார்ஜாவில் ஏகதா அமைப்பு, இந்திய துணைத் தூதரகத்துடன் இணைந்து அமீரகத்தின் 54வது தேசிய தின விழாவை மிகவும் உற்சாகமாக கொண்டாடியது. இந்திய துணைத் தூதரகத்தின் கன்சுலர், தொழிலாளர் மற்றும் மதத் பிரிவின் அதிகாரி பபித்ர குமார் மஜும்தார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் இந்தியா - மற்றும் அமீரகம் இடையே இருந்து சிறப்பான நல்லுறவு குறித்து பெருமிதம் தெரிவித்தார். அமீரக தலைவர்கள் உள்ளிட்ட மக்களுக்கு அமீரக தேசிய தின விழா வாழ்த்துக்களை கூறினார். பள்ளிக்கூட மாணவ, மாணவியர் அமீரக தேசிய கொடி வண்ணத்தில் உடைகளை அணிந்து கண்கவர் கலை நிகழ்ச்சிகளில் ஈடுபட்டனர். அமீரக, இந்திய முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். - ஷார்ஜாவிலிருந்து நமது வாசகர் பெருமாள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்