சவூதி அரேபியாவில் இந்திய உயர்கல்வி வாய்ப்பு கண்காட்சி
சவூதி அரேபியாவில் இந்திய உயர்கல்வி வாய்ப்பு கண்காட்சி ஜெத்தா: மத்திய கிழக்கில் இந்திய உயர் கல்வியை முன்னிறுத்தி வரும் எடுநியல் இன்ஃபோடெக் குழுமத்தின் தலைமையில், இந்தியாவின் 17 முன்னணி பல்கலைக்கழகங்கள் சவூதி அரேபியாவின் மூன்று முக்கிய நகரங்களில் “இந்திய உயர்கல்வி & தொழில் வாய்ப்பு கண்காட்சி - 2025” நிகழ்வில் பங்கேற்க உள்ளன. ECGS Education, ஜெத்தா உடன் இணைந்து நடை பெறும் இந்நிகழ்வு, இந்திய மாணவர்களுக்கு புதிய கல்வி வாய்ப்புகளை அறிமுகப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்தியாவில் தற்போது 1,100-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் 42,000 கல்லூரிகள் செயல்பட்டு வருவதால், உயர்கல்வியில் இந்தியா உலகின் முன்னணியில் திகழ்ந்து வருகிறது.ஜெத்தாவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், எடுநியல் இன்ஃபோடெக் குழும இயக்குனர் திரிபுவன் பிரதாப் சிங் மற்றும் ECGS Education பொது மேலாளர் ரியாஸ் முல்லா இணைந்து, கண்காட்சி நடைபெறும் நகரங்களை அறிவித்தனர். ஜெத்தா - இந்திய பன்னாட்டு பள்ளி தம்மாம் - டூன்ஸ் பன்னாட்டு பள்ளி ரியாத் - இந்திய பன்னாட்டு பள்ளிநிகழ்வைப் பற்றி த்ரிபுவன் சிங் பேசுகையில் , “இந்தக் கண்காட்சி இந்திய உயர் கல்வியின் மேன்மையை மாணவர்களுக்கு நேரடியாக கொண்டு சேர்க்கும் ஒரு தளம். உதவித்தொகைகள், பாடநெறி தகவல்கள் மற்றும் தொழில் வழிகாட்டுதல் பல்கலைக்கழகங்கள் வழங்க உள்ளது,” என்றார்.ரியாஸ் முல்லா கூறியதாவது: “மருத்துவம், மேலாண்மை, பொறியியல், தொழில்நுட்பம், மீடியா, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல துறைகளில் படிப்புகளை வழங்கும் இந்திய பல்கலைக்கழகங்களை மாணவர்கள் நேரடியாக சந்திக்க இது ஒரு சிறப்பான வாய்ப்பு.”சவூதி அரேபியாவில் 2.5 மில்லியனுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசிப்பதை முன்னிட்டு, இந்திய மாணவர்கள் மலிவான மற்றும் தரமான கல்வியை பெறும் வாய்ப்புகள் மேலும் விரிவாக்குவதே ECGS மற்றும் எடுநியல் குழுமத்தின் கூட்டு இலக்காகும்.- ஜெத்தாவில் இருந்த நமது செய்தியாளர் எம்.சிராஜ்.