உள்ளூர் செய்திகள்

பஹ்ரைனில் இந்திய கடற்படை கப்பல்களுக்கு உற்சாக வரவேற்பு

மனாமா: பஹ்ரைன் நாட்டின் தலைநகர் மனாமாவில் உள்ள துறைமுகத்துக்கு இந்தியாவைச் சேர்ந்த மூன்று கடற்படை கப்பல்கள் நல்லெண்ண பயணமாக வந்தன. அந்த கப்பல்களுக்கு பஹ்ரைன் கடற்படையின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்திய தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கப்பலில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பலரும் பங்கேற்றனர். இதனையடுத்து இந்திய, பஹ்ரைன் கடற்படையினர் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டனர்.- நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !