
ஒருநாள் காட்டுவழியாக வெளியூரில் இருந்து வந்தார் முல்லா. முரடன் ஒருவன் அவரை அவமானப்படுத்த நினைத்தான். கத்தியை காண்பித்து ''முல்லா அவர்களே! எவ்வளவு பெரிய ஆபத்தானாலும் உமது அறிவால் தப்பித்துக்கொள்வீர் என மக்கள் கூறுகிறார்களே அது உண்மைதானா?” எனக் கேட்டார். மக்கள் கூறியது உண்மை தான் என்றார்.
முரடனோ! இப்போது உம்மை குத்தப்போகிறேன். எப்படி தப்பிக்க போகிறீர் என பார்போம் என்று அவரை நெருங்கினான். அப்போது வானத்தைப்பார்த்து மகிழ்ச்சியில் சிரித்தார். ஏன் சிரிக்கிறீர் என அவரிடம் கேட்டான் முரடன்.
அதற்கு அன்பரே, இறக்கும் முன்பே வானத்திலே பறக்கும் தங்கப்பறவையை ஆசை தீரப்பார்த்து விட்டேன் என்றார். அவனும் தங்கப்பறவையா என வியப்புடன் வானத்தை நோக்கினான். அந்தச்சமயம் அவனது கையிலிருந்த கத்தியை தட்டிப் பறித்தார். உம்முடைய உயிர் என் கையில் நான் நினைத்தால் உம்மை கொலை செய்து விட முடியும் என்றார் முல்லா. முரடன் தனது தோல்வியை ஒப்புக்கொண்டான். தாங்கள் உண்மையில் அறிவாளி தான் என்று கூறி மன்னிப்பு கேட்டான். முரடனிடம் கத்தியை கொடுத்து விட்டு தன் ஊரின் திசை நோக்கி நடந்தார்.

