
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மன்னர் ஒருவர் அரண்மனையில் கலைநயம் மிக்க பளிங்குச் சிலைகளை வைத்திருந்தார். காலை எழுந்தவுடன் அவற்றைப் பார்த்து ரசிப்பதுதான் அவருக்கு முதல் வேலை.
சிலை மீதுள்ள துாசியை துடைத்துக் கொண்டிருந்த பணியாளரின் கவனக்குறைவால் ஒரு சிலை உடைந்து விட்டது.
கோபப்பட்ட மன்னர் அவருக்கு மரண தண்டனை விதித்தார். இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த அமைச்சர் தன் பங்கிற்கும் ஒரு சிலையை உடைத்தார்.
''உங்களுக்கு என்ன பைத்தியம் பிடித்து விட்டதா மந்திரியாரே...'' எனக் கத்தினார் மன்னர்.
''மன்னா! அந்தக் கேள்வியை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். உயிரற்ற பொருளுக்காக உயிருள்ள மனிதரை கொல்ல துணிந்து வீட்டீர்களே... இது தர்மமா?'' எனக்கேட்டார்.
இதைக்கேட்ட மன்னர் தன் தவறை உணர்ந்து, பணியாளரை விடுவிக்க சொன்னார்.

