திருமணமான தம்பதிகளை பல்லாண்டு வாழ்க என்றும், பதினாறு பேற்றினை பெறுங்கள் என பெரியோர்கள் வாழ்த்துவது மரபு. அந்த பதினாறு பேறுகள் தான் என்ன...
புகழ், கல்வி, வலிமை, வெற்றி, நன்மக்கள், செல்வம், தான்யம், பாவபுண்ணியம், இன்பம், அறிவு, அழகு, பெருமை, இளமை, துணிவு, நோயின்மை, நீண்ட வாழ்நாள் போன்றவை. இந்த பதினாறுகளையும் ஒருவர் பெறுவதற்கு சிவபெருமானின் திருநாமங்கள் பதினாறினையும் உள்ளன்போடு சொன்னால் போதும். மதுரை திருவிளையாடல் புராணம் வெள்ளியம்பல திருக்கூத்தாடிய படலத்தில் பரஞ்ஜோதி முனிவர் கீழ்கண்ட பதினாறு போற்றிகளை சொல்லித்துதிக்கிறார். போற்றியை சொல்வோம். புகழ் பெறுவோம்.
பராபர முதலே போற்றி பத்தியில் விளைவாய் போற்றி
சராசரமாகி வேறாய் நின்ற தற்பரனே போற்றி
கராசல உரியாய் போற்றி கனக அம்பலத்துள் ஆடும்
நிராமய பரமானந்த நிருத்தனே போற்றி போற்றி.
ஒன்றாகி ஐந்தாயை ஐந்துருவாகி வருவாய் போற்றி
இன்றாகிச் சென்ற நாளாய் எதிர் நாளாய் எழுவாய் போற்றி
நன்றாகித் தீயதாகி நடுவாகி முடிவாய் மன்றுள்
நின்றாடும் பரமானந்த நிருத்தனே போற்றி போற்றி
அடியரேம் பொருட்டு வெள்ளி அம்பலத்து ஆடல் போற்றி
பொடி அணி தடம் தோள் போற்றி புரி சடை மகுடம் போற்றி
கடி அவிழ் மலர் மென் கூந்தல் கயல்விழி பாகம் போற்றி
நெடிய நல் பரமானந்த நிருத்தனே போற்றி போற்றி

