sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

பிறவி மயக்கம் தீர மருந்து சாப்பிடுங்க...

/

பிறவி மயக்கம் தீர மருந்து சாப்பிடுங்க...

பிறவி மயக்கம் தீர மருந்து சாப்பிடுங்க...

பிறவி மயக்கம் தீர மருந்து சாப்பிடுங்க...


ADDED : ஜூன் 22, 2023 11:37 AM

Google News

ADDED : ஜூன் 22, 2023 11:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருமருந்தொரு தனிமருந்திது

அம்பலத்தே கண்டேனே

திருமருந்துடன் வருமருந்து

தில்லை அம்பலத்தாடும் மருந்து

இருவினைகள் அறுக்கும் மருந்து

ஏழை அடியார்க்கு இரங்கும் மருந்து

கொன்றை தும்பை அணிந்த மருந்து

கோவை மீதில் படர்ந்த மருந்து

மன்றுளே நின்றாடும் மருந்து

மாணிக்க வாசகர் கண்ட மருந்து

இந்திர ரானவர் வானவர் போற்றும்

இருடிகள் தமக் கெட்டா மருந்து

சந்திர சூரியர் காணா மருந்து

தானே முளைத்துத் தழைத்த மருந்து

திரித் தித்தித்தியென்று ஆடும் மருந்து

தேவாதி மூவர்கள் காணா மருந்து

கருத்தைத் திருத்தி இருத்தும் மருந்து

காலனைக் காலால் உதைத்த மருந்து

கோயில் என்றால் அது கடலுார் சிதம்பரத்தை குறிக்கும். அங்கு எழுந்தருளி இருக்கும் நடராஜரின் சிறப்பினை எண்ணற்ற அருளாளர்கள் பாடல்கள் பாடி அதன் மூலம் நிருப்பித்துள்ளனர். அவையாவும் தெய்வீகமானவை.

நடராஜர் மீது அவர்களால் இயற்றப்பட்ட பாடல்களை நியமப்படி ஒருவர் தொடர்ந்து செய்து வருவாரேயானால் அவர் நினைத்து நடக்கும்.

சிதம்பரம் அருகே உள்ள சீர்காழி தலத்தில் பிறந்தவர் முத்துத்தாண்டவர். இசைத்துறையின் பிதாமகர் என போற்றப்பட்டவர். இவர் நாள்தோறும் சிதம்பரம் சென்று நடராஜரை தரிசனம் செய்து வருவதை வழக்கமாக கொண்டார். ஒரு நாள் கோயிலுக்கு வரும் வழியில் பாம்பு ஒன்று அவரைத் தீண்டியது.

அவ்விஷம் நீங்க இந்த பாடலை பாடிய போது விஷம் தானாக இறங்கியது.

பிறவி என்னும் விஷத்தை போக்கும்

நடராஜர் மருத்துவராகவும் இருக்கிறார்

என்பது பாடலின் வெளிப்படையான பொருள். பாடலை படியுங்கள். பிறவி மயக்கத்தில் இருந்து விடுபடுங்கள்.






      Dinamalar
      Follow us