sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்!

/

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!


ADDED : டிச 14, 2018 11:00 AM

Google News

ADDED : டிச 14, 2018 11:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விநாயகர் இல்லாமல் தனியாக உள்ள அரசமரத்தை சுற்றலாமா?

ஏ.எஸ்.ராஜேந்திரன் விருதுநகர்

தெய்வீக சக்தி நிறைந்தது அரசமரம். விநாயகர் இன்றி தனியாக இருந்தாலும், சுற்றி வந்தால் புண்ணியமே. இதை போல கோமாதாவான பசுவை எங்கு சுற்றி வந்தாலும் நன்மையே.

இரண்டாவது கர்ப்பம் தரித்த பெண்ணுக்கு வளைகாப்பு நடத்தலாமா?

ப.உமா மகேஸ்வரி. நெய்வேலி

இல்லை. முதல் கர்ப்பத்தின் போது வளைகாப்பு நடத்தவில்லையெனில் இப்போது நடத்தலாம்.

சுமாராகப் படிக்கும் என் மகன் கல்வியில் முன்னேற பரிகாரம் கூறுங்கள்.

ஆர்.லட்சுமி, நங்கநல்லுார்

'சுமாராகப் படிக்கிறான்' என மகன் காதில்விழும்படி பேசாமலிருப்பது முதல் பரிகாரம். பெற்றோர் தரும் ஊக்கம், ஒத்துழைப்பே கல்வி வளர்ச்சிக்கான முதல்படி. கல்விக்கடவுள் சரஸ்வதியை புதன்கிழமை அன்று வழிபடுங்கள்.

* சிந்தாமணி விநாயகர் என்பதன் பொருள் என்ன?

என்.பி.லட்சுமி, மதுரை

காமதேனு, கற்பகவிருட்சம் போல நினைத்ததைத் தரும் ரத்தினத்திற்கு 'சிந்தாமணி' என பெயர். இதைப் போல பக்தர்களின் விருப்பம் அறிந்து நிறைவேற்றுபவர் 'சிந்தாமணி விநாயகர்'.

* சுமங்கலியாக இறந்தவருக்கு கணவர் திவசம் செய்யலாமா?

சி.எம்.வைத்தியநாதன்,போரூர்

புத்திரன் என்பதற்கு 'நரகத்திற்கு செல்லாமல் காப்பாற்றுபவன்' என பொருள். அதாவது மகன் செய்யும் பிதுர் காரியங்கள் மூலம் இறந்த உயிர் மோட்சத்தை அடைகிறது. இதற்கான முதல் அதிகாரம் மூத்த மகனுக்கே உண்டு. பிள்ளைகள் இல்லாவிட்டால் கணவர் செய்யலாம்.

உண்ணா நோன்பு, பேசாநோன்பு - ஒப்பிடுங்கள்.

வி.சாமிநாதன், ஆதம்பாக்கம்

உண்ணாநோன்பு என்பது சாப்பிடாத விரதம், பேசாநோன்பு என்பது மவுன விரதம். இரண்டும் ஆன்மிக சிந்தனை வளர துணைபுரிகின்றன. விரதத்தால் உடலும், மவுனத்தால் மனமும் துாய்மை பெறுகின்றன.






      Dinamalar
      Follow us