நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு
பொருள்: விநாயகப்பெருமானின் திருவடிகளை தினமும் பூக்களால் வழிபடுவோருக்கு நல்ல வாக்கு, துாய்மையான மனம், திருமகளின் அருள், நோயற்ற வாழ்வு கிடைக்கும்.

