
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இரும்பனன்று உண்ட நீரும் போதருங் கொள்க என்றன்
அரும்பிணி பாவம் எல்லாம் அகன்றன என்னை விட்டு
சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கமா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டென் கண்ணினை களிக்குமாறே.
பொருள்: வண்டுகள் ஆரவாரம் செய்யும் அழகிய சோலை சூழ்ந்த ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கும் ரங்கநாதர் கரும்பு போல இனிமையானவர். அவரைக் கண்குளிரக் கண்டதால் சூடான இரும்பில் பட்ட நீர் உறிஞ்சப்பட்டு மறைவது போல என் பாவம் அனைத்தும் மறைந்தன.

