ADDED : நவ 23, 2018 03:15 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
என்ன தேவை
உளுந்தம் பருப்பு - 400 கிராம்
பச்சை மிளகாய் - 5
சாம்பார் வெங்காயம் - 8
கறிவேப்பிலை - 1 இணுக்கு
சீரகம் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 500 மி.லி.,
உப்பு - டேபிள் ஸ்பூன்
எப்படி செய்வது
* உளுந்தம் பருப்பை ஒரு மணிநேரம் ஊற வைத்து உப்பு, மிளகாய் சேர்த்து தண்ணீர் தெளித்து பந்து போல் அரைத்து எடுக்கவும். தண்ணீர் அதிகம் சேர்க்கக் கூடாது. வெங்காயம், கறிவேப்பிலை இரண்டையும் பொடியாக நறுக்கி மாவுடன் சேர்த்து சீரகத்தையும் கலந்து பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், வடையைத் தட்டி நடுவில் துவாரம் செய்து எண்ணெய்யில் போட்டுத் திருப்பி விட்டு பொன்னிறமாக எடுத்தால் சூடான சுவையான உளுந்துவடை ரெடி.

