sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சொல்லின் செல்வி

/

சொல்லின் செல்வி

சொல்லின் செல்வி

சொல்லின் செல்வி


ADDED : அக் 04, 2022 04:07 PM

Google News

ADDED : அக் 04, 2022 04:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மனிதர்களின் நாக்கில் சரஸ்வதி இருக்கிறாள். கல்வியை அளிக்கும் கடமை அவளின் பணி. உயிர்களுக்கு ஞானப் பாலுாட்டி மோட்சத்தை அடைய வழி வகுக்கும் இவளுக்கு பல பெயர்கள் உள்ளன.

* சொல், வாக்கிற்கு அதிபதியாக விளங்குவதால் சரஸ்வதி, கலைமகள், பாரதி, வாணி, வாக்கிறைவி, வாக்கின் செல்வி, வாக்குத்தேவி, வாக்கு வாதினி, வித்யாதேவி, சொல்லிருங்கிழத்தி, சொற்கலையாள், சொல் மங்கை என போற்றப்படுகிறாள்.

* உயிர்களுக்கு ஞானத்தைப் புகட்டுவதால் ஞானக்கொடி, ஞானக்கொழுந்து, ஞான அமலி, ஞான பிராட்டி, ஞானப் பூங்கொடி என அழைக்கப்படுகிறாள்.

* கவிஞர்களின் நாக்கில் குடியிருப்பதால் நாமடந்தை, நாமிசைக் கிழத்தி, நாவுக்கரசி என்றெல்லாம் துதிக்கப்படுகிறாள்

* கையில் வீணையேந்தி இசை மழை பொழிவதால் இசைக்காரிகை, இசைதனில் அமுதம் வடிப்பவள், இசை மடந்தை, இசைவாணி, உயரும் வீணைக் கரத்தினள் எனவும் இவளைப் போற்றுவர்.

* கலைக்கு அதிபதியாக இருப்பதால் கலை ஓதும் மலர்மாது, கலைக்கொடி, கலைஞானத் தோகை, கலைஞானவல்லி, கலைத்திருமடந்தை, கலைப்பெருமாட்டி, கலைமின்னாள், கலையணங்கு என்றெல்லாம் குறிப்பிடுவர்.

* பிரம்மாவின் மனைவியானதால் பிராமி எனவும், எல்லாவற்றையும் தாங்குவதால் பாரதி எனவும் அழைப்பர்.






      Dinamalar
      Follow us