ADDED : டிச 14, 2018 11:02 AM

1. 108 திவ்ய தேசங்களில் முதன்மையான தலம்..........
ஸ்ரீரங்கம்
2. ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசலைக் கடக்கும் பெருமாள்..........
நம்பெருமாள்
3. நம்பெருமாள் சிங்கம் போல் நடந்து வரும் காட்சியை........ என்பர்.
சிம்மகதி
4. சொர்க்கவாசலைக் கடந்ததும் நம்பெருமாள் எழுந்தருளும் மண்டபம்.......
ஆயிரங்கால் மண்டபம்
5. ஏகாதசிக்கு மறுநாளில் இருந்து பத்து நாட்கள் சொர்க்கவாசல் திறக்கும் நேரம்..........
மதியம் 12:00 மணி
6. அரங்கனைக் கண்ட கண்கள் மற்றொன்றைக் காணாதே எனக் கூறியவர்..........
திருப்பாணாழ்வார்
7. திருவரங்கம் கோயில் முற்றும் திருத்தி எனப் போற்றப்படுபவர்...........
ராமானுஜர்
8. நம்பெருமாளுக்கு செய்யப்படும் சிரசு அலங்காரங்கள்.........
வைரமுடி, பாண்டியன் கொண்டை, சவுரிக்கொண்டை
9. ஸ்ரீரங்கத்தில் உள்ள ராமானுஜரின் திருமேனி......
தானான திருமேனி
10. இந்திரலோக பதவியை விட ஸ்ரீரங்க தரிசனம் சிறப்பு எனக் கூறியவர்............
தொண்டரடிப்பொடியாழ்வார்

