ADDED : ஜூன் 22, 2023 11:17 AM

* ராமாயண உபன்யாஸம் நடக்கும் இடத்திற்கு அனுமன் வருவதால், அவருக்கு தனி ஆசனம் வைப்பது அவசியம்.
* மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் வாங்கி கொடுத்தால், பதவி உயர்வு கிடைக்கும்.
* விநாயகரின் சன்னதியைத் தவிர, பிற தெய்வத்தின் சன்னதி எதிரில் தோப்புக்கரணம் இடக்கூடாது.
* உங்களிடம் வேலை செய்பவரின் பணத்தேவையை பூர்த்தி செய்தால், வங்கிக் கடன் கிடைக்கும்.
* கோயிலின் மதில் சுவருக்குள் எந்த ஒரு பகுதியிலும், யாரும் காலில் செருப்பு அணிந்து நடக்கக்கூடாது.
* புண்ணியத் தலம் செல்லும்போது, அங்கு வர விரும்பும் இரண்டு நண்பர்களை கூட அழைத்துச் செல்லுங்கள். உங்களது வியாபாரத்தில் கூட்டாளி இடையே இருக்கும் பிரச்னை தீரும்.
* சுவாமிக்கு வில்வம், தாமரை, துளசியால் அர்ச்சனை, அலங்காரம் செய்வோம்.
இப்படி பறிக்கப்பட்ட வில்வம் - 10 நாள், தாமரை - 5 நாள், துளசி - 11 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.

