sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சொர்க்கவாசல் திறக்குது! யோகம் மலருது!

/

சொர்க்கவாசல் திறக்குது! யோகம் மலருது!

சொர்க்கவாசல் திறக்குது! யோகம் மலருது!

சொர்க்கவாசல் திறக்குது! யோகம் மலருது!


ADDED : டிச 14, 2018 11:31 AM

Google News

ADDED : டிச 14, 2018 11:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பாணாழ்வாரின் பாசுரத்தை படித்தால் யோகம் உண்டாகும்.

அமலனாதி பிரானடியார்க்கு என்னை ஆட்படுத்த

விமலன் விண்ணவர் கோன் விரையார்பொழில் வேங்கடவன்

நிமலன் நின்மலன் நீதிவானவன் நீள்மதி ளரங்கத் தம்மான் திருக்

கமலபாதம் வந்தென் கண்ணி னுள்ளன வொக்கின்றதே.

உவந்த உள்ளத்தனா யுலகமளந் தண்டமுற

நிவந்த நீள்முடியன் அன்று நேர்ந்த நிசாசரரை

கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார் பொழில்

அரங்கத்தம்மான் அரைச்சிவந்த ஆடையின் மேல்சென்ற தாமென் சிந்தனையே.

மந்தி பாய் வட வேங்கட மாமலை வானவர்கள்

சந்தி செய்ய நின்றான் அரங்கத் தரவின் அணையான்

அந்தி போல்நிறத் தாடையும் அதன் மேல் அயனைப்

படைத்த தோரெழில் உந்தி மேலதன்றோ அடியேன் உள்ளத் தின்னுயிரே.

சதுரமா மதிள்சூழ் இலங்கைக்கு இறைவன் தலைபத்து

உதிர வோட்டிஓர் வெங்கணை உய்த்தவ னோத வண்ணன்

மதுரமா வண்டு பாட மாமயி லாடரங்கத் தம்மான் திருவயிற்று

உதரபந்தனம் என்னுள்ளத்துள் நின்று உலாவுகின்றதே.

பாரமாய பழவினை பற்றறுத்து என்னைத் தன்

வாரமாக்கி வைத்தான் வைத்ததன்றி என்னுள் புகுந்தான்

கோர மாதவம் செய்தனன் கொலறியேன் அரங்கத் தம்மான்திரு

வார மார்பதன்றோ அடியேனை ஆட்கொண்டதே.

துண்ட வெண்பிறை யான்துயர் தீர்த்தவன் அஞ்சிறைய

வண்டுவாழ் பொழில் சூழரங்க நகர் மேயவப்பன்

அண்ட ரண்ட பகிரண்டத்தொரு மாநிலம் எழுமால்வரை முற்றும்

உண்ட கண்டம் கண்டீர் அடியேனை உய்யக் கொண்டதே.

கையினார் சுரிசங்கன லாழியர் நீள்வரை போல்

மெய்யனார் துளப விரையார் கமழ்நீள் முடியெம்

ஐயனார் அணியரங்கனார் அரவின் அணைமிசை

மேய மாயனார் செய்யவாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே.

பரிய னாகி வந்த அவுணன் உடல்கீண்ட அமரர்க்கு

அரிய ஆதிபிரான் அரங்கத்து அமலன் முகத்து

கரிய வாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்டவப்

பெரிய வாய் கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே.

ஆலமாமரத்தின் இலை மேல் ஒரு பாலகனாய்

ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத் தரவின் அணையான்

கோலமாமணி ஆரமும் முத்துத் தாமமும் முடிவில்ல தோர் எழில்

நீலமேனி ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினையே.

கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்

உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை

அண்டர் கோன் அணி அரங்கன் என் அமுதினைக்

கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே.






      Dinamalar
      Follow us