
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸப்த ப்ராகார மத்யே ஸரஸிஜமுகுளோத்பாஸமானே விமானே
காவேரீமத்ய தேேஸ ம்ருதுதபணிராட் போகபர்யங்க பாகே!
நி்த்ராமுத்ராபி ராமம் கடிநிகட ஸிர: பார்ஸ்வவின்யஸ்த ஹஸ்தம்
பத்மாதாத்ரீ கராப்யாம் பரிசித சரணம் ரங்கராஜம் பஜேஹம்!!
பொருள்: இரண்டு காவிரியாறுகளின் நடுவில் ஏழுமதில் சூழ வீற்றிருப்பவரே! தாமரை மொட்டு போன்ற விமானத்தில் மிருதுவான ஆதிசேஷன் மீது துயில்பவரே! அழகுமிக்கவரே! இடதுகையை இடுப்பில் வைத்தவரே! ஸ்ரீதேவி, பூதேவி வருடும் திருப்பாதம் கொண்டவரே! ரங்கராஜப்பெருமாளே! உம்மை வணங்குகிறேன்.

