
ஜூன் 16 ஆனி 1: கார்த்திகை. கும்பகோணம் பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர், திருசக்திமுற்றம் சத்தியவனேஸ்வரர் முத்துபந்தல் அருளிய திருவிளையாடல். சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். கரிநாள்.
ஜூன் 17 ஆனி 2:சர்வ அமாவாசை. சிதம்பரம், திருப்பெருந்துறை ஆவுடையார்கோவில் உத்தரகோசமங்கை, திருவாலங்காடு, குற்றாலம் கோயில்களில் ஆனி உத்திரத்திருவிழா ஆரம்பம்.
ஜூன் 18 ஆனி 3: திருவள்ளூர் வீரராகவர் தெப்பம். கீழ்த்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னதி எதிரில் உள்ள அனுமனுக்கு திருமஞ்சனம். திருநெல்வேலி காந்திமதி சமேத நெல்லையப்பருக்கு தாமிரபரணி ஆற்றில் அபிஷேகம்.
ஜூன் 19 ஆனி 4: அமிர்தலட்சுமி விரதம். திருவாதிரை விரதம். சந்திர தரிசனம். சென்னை ஸ்ரீ பெரும்புதுார் மணவாள மாமுனிகள் உடையவர் புறப்பாடு. சென்னை திருவல்லிக்கேணி பார்த்த சாரதிப்பெருமாள் மூலவருக்கு திருமஞ்சனம்.
ஜூன் 20 ஆனி 5: ராமநாதபுரம் கோதண்டராமசுவாமி உற்ஸவம் ஆரம்பம். பத்ராசலம் ராமபிரான் புறப்பாடு. சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
ஜூன் 21 ஆனி 6: திருமெய்யம் சத்தியமூர்த்தி புறப்பாடு. சென்னை திருவல்லிக்கேணி பார்த்த சாரதிப்பெருமாள் கோயிலில் நரசிம்மர் மூலவருக்கு திருமஞ்சனம். கரிநாள்.
ஜூன் 22 ஆனி 7: அமிர்த யோகம். சதுர்த்தி விரதம். மிலட்டூர் விநாயகப்பெருமான் புறப்பாடு. திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. தேரெழுந்துார் ஞானசம்பந்தர் புறப்பாடு. சிதம்பரம், ஆவுடையார்கோவில் தலங்களில் சிவபெருமான் பவனி.

