sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

எங்கும் நிறைந்தவன்!

/

எங்கும் நிறைந்தவன்!

எங்கும் நிறைந்தவன்!

எங்கும் நிறைந்தவன்!


ADDED : மார் 04, 2014 02:17 PM

Google News

ADDED : மார் 04, 2014 02:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிரகஸ்பதி எனப்படும் தேவகுருவை மூன்று இளைஞர்கள் தேடி வந்தனர். ''முனிசிரேஷ்டரே! உம் சீடராக எங்களை ஏற்க வேண்டும்,'' என்றனர்.

ஆளுக்கொரு கிளியைக் கொடுத்த குரு, ''யாரும் இல்லாத இடத்திற்குச் சென்று இந்த பறவையைக் கொன்று விட்டு வாருங்கள்,'' என உத்தரவிட்டார்.

முதல் இளைஞன் கிளியை எடுத்துக் கொண்டு, காட்டுக்குச் சென்றான். ஆளே இல்லாத அந்த காட்டில், கிளியைக் கொன்று விட்டு குருவிடம் திரும்பினான். குரு அவனிடம், ''உனக்கு இன்னும் பக்குவம் வரவில்லை. அதனால் உன்னை சீடனாக ஏற்க முடியாது,'' என அனுப்பி விட்டார்.

இரண்டாவது இளைஞனுக்கு கிளியின் மீது இரக்கம் உண்டானது. கொல்ல மனமின்றி, அதைக் காட்டில் உயிரோடு பறக்கவிட்டான். அவனிடம் குரு,''நீ இரக்கம் கொண்டவன். உனக்கு நல்ல குரு கிடைக்க என் ஆசிகள்,'' என்று திருப்பி அனுப்பினார். மூன்றாவது இளைஞன் எங்கும் சுற்றித் திரிந்தான். எங்கும் இறைவன் நிறைந்திருக்கிறார். அதனால், யாரும் இல்லாத இடம் என்று ஒரு இடம் எங்குமில்லை. அதனால், இதைக் கொல்ல முடியாது,'' என்று சொல்லி குருவிடம் கிளியை ஒப்படைத்தான். அவனைக் குரு சீடனாக ஏற்றுக் கொண்டார். பின், தன் யோகசக்தியால் மூன்று கிளிகளையும் வரவழைத்து அவர்களின் சுயரூபத்திற்கு மாற்றினார். கந்தவர்களாக மாறிய கிளிகள், குருவை வணங்கி புறப்பட்டனர்.






      Dinamalar
      Follow us