sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

நன்மை தருவார்

/

நன்மை தருவார்

நன்மை தருவார்

நன்மை தருவார்


ADDED : நவ 14, 2025 08:37 AM

Google News

ADDED : நவ 14, 2025 08:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'பாட்டும் நானே; பாவமும் நானே' என்ற பாடலைக் கேட்டிருப்பீர்கள். 'பார்ப்பவனும் நானே; பார்க்கப்படுபவனும் நானே' என்ற கோலத்தில் உள்ள சிவனை பார்த்திருக்கிறீர்களா... அவர் தான் மதுரையில் கோயில் கொண்டிருக்கும் இம்மையில் நன்மை தருவார்.

பாண்டிய மன்னர் மலையத்துவஜனுக்கு குழந்தை இல்லை. குறை தீர புத்திரகாமேஷ்டி யாகத்தை நடத்த, யாகத்தீயில் இருந்து மூன்று வயது குழந்தையாக பார்வதி அவதரித்தாள். 'தடாதகைப் பிராட்டி' எனப் பெயரிட்டு வளர்த்தார் மன்னர். பாண்டிய இளவரசியான அவள் மீன் போல துாங்காமல் ஆட்சி புரிந்ததால் மீனாட்சி எனப்பட்டாள். உலகமே அவள் அழகைக் கண்டு சொக்க, அவளோ கயிலைநாதரான சிவனைக் கண்டு சொக்கினாள். அதனால் சிவனுக்கு 'சொக்கநாதர்' எனப் பெயர் ஏற்பட்டது.

மீனாட்சி, சொக்கநாதரின் திருமணவிழா மதுரையில் விமரிசையாக நடந்தது. அதன் பின் மதுரையின் மன்னராக சொக்கநாதருக்கு பட்டம் கட்ட ஏற்பாடு நடந்தது. அரியணை ஏறும் மன்னர்கள் முதலில் சிவபூஜை செய்வது வழக்கம். அதன்படி சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து சொக்கநாதரும், மீனாட்சியும் வழிபட்டனர். இதன் அடிப்படையில் எழுந்த கோயிலே இம்மையிலும் நன்மை தருவார் கோயில். இப்பிறப்பிலேயே நமக்கு நன்மை தருபவர் என பொருள்.

ஆவணி மாதத்தில் மீனாட்சியம்மனுடன் சொக்கநாதர் இங்கு வந்து சிவபூஜை செய்வர். கருவறையில் மீனாட்சி, சொக்கநாதர் மேற்கு நோக்கியும், நன்மை தருவார் கிழக்கு நோக்கியும் உள்ளனர். மத்தியபுரி நாயகியம்மன் தனி சன்னதியில் தெற்கு நோக்கி இருக்கிறாள். திருமணத்தடை அகலவும், குழந்தைப் பேறு கிடைக்கவும் வெள்ளி அன்று விளக்கேற்றுகின்றனர். காலபைரவருக்கு காரப்புளியோதரை நைவேத்யம் செய்தால் எதிரிபயம், மனக்குழப்பம் நீங்கும். எல்லாம் வல்ல சித்தருக்கு பூப்பந்தல் இட்டால் எதிர்பார்ப்பு நிறைவேறும். நினைத்தது நடந்தேற முருகனுக்கு பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செய்கின்றனர்.

எப்படி செல்வது: மதுரை மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ளது.

விசேஷ நாள்: மாசி பிரம்மோற்ஸவம், சனிபிரதோஷம், மகாசிவராத்திரி.

நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 4:30 - 9:00 மணி

தொடர்புக்கு: 94434 55311

அருகிலுள்ள கோயில்: மீனாட்சி அம்மன் 1 கி.மீ.,(நிம்மதியாக வாழ...)

நேரம்: அதிகாலை 5:00 - 12:30 மணி; மாலை 4:00 - 9:00 மணி

தொடர்புக்கு: 0452 - 234 9868, 234 4360






      Dinamalar
      Follow us