sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

தீர்க்க சுமங்கலியாக வாழ மீனாட்சிக்கு ஹோமம்

/

தீர்க்க சுமங்கலியாக வாழ மீனாட்சிக்கு ஹோமம்

தீர்க்க சுமங்கலியாக வாழ மீனாட்சிக்கு ஹோமம்

தீர்க்க சுமங்கலியாக வாழ மீனாட்சிக்கு ஹோமம்


ADDED : ஜூலை 01, 2011 11:44 AM

Google News

ADDED : ஜூலை 01, 2011 11:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தீர்க்க சுமங்கலியாக வாழ சாத்தூர் கோல்வார்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் ஹோமம் நடத்துகின்றனர்.

தல வரலாறு: எட்டையபுரத்தில் சில நூறு ஆண்டுகளுக்கு முன் கலங்காத கண்டப்ப நாயக்கர் ஆட்சி செய்து வந்தார். சில தோஷங்கள் காரணமாக, அவர், அப்போது நடந்த போர்களில் வெற்றி இழந்தார். தோஷ நிவர்த்திக்காக பல்வேறு கோயில்களுக்குச் சென்றார். ஒருசமயம், ''சுவாமியின் வலப்புறம் ஆற்றலுடன் அருள்பாலிக்கும் அம்பாள் கோயிலுக்குச் சென்று வழிபடுவதுடன், வலப்புறம் அம்பாளுடன் கூடிய சிவன் கோயிலும் கட்டினால் தோஷம் நீங்கும்,'' என்று அசரீரி எழுந்தது. அதன்படி மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் அம்பாள், சுவாமியைத் தரிசித்தார். ஜமீன் எல்கைக்கு உட்பட்ட சாத்தூர் அருகிலுள்ள கோல்வார்பட்டியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அமைப்பில், மீனாட்சி சொக்கநாதர் கோயில் கட்டினார். நூறு கால் மண்டபம் ஒன்றையும் அமைத்தார். இவ்வூரைச் சுற்றியுள்ள 18 பட்டிக்கும் குலதெய்வமாக மீனாட்சி விளங்குகிறாள். வீரபாண்டிய கட்டபொம்மன் இந்தக் கோயிலை பராமரித்து வந்துள்ளார்.

தல சிறப்பு: கலைநுணுக்கம் மிக்க சிலைகள் இங்கு காணப்படுகிறது, குறிப்பாக ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ராமர், சீதை மற்றும் அனுமன் சிலை அற்புதமாக இருக்கிறது. மீனாட்சி அம்மன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். கையில் கிளி இல்லாமல் தாமரை மலருடன் அருள்பாலிக்கும் இவளை 11 வாரங்கள் வணங்கி, கடைசி வாரம் ஹோமம் செய்தால் தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியம் கிடைக்கும். பவுர்ணமியன்று திருவிளக்கு பூஜை நடத்துதல், பிரதோஷ காலத்தில் நெய்விளக்கு ஏற்றுவதால். புத்திசாலித்தனமும், தைரியமும் உள்ள குழந்தைகள் பிறப்பார்கள் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

சிறப்பம்சம்: ராகு, கேதுவுடன் அருள்பாலிக்கும் விநாயகர் நாகதோஷத்தை விலக்கும் சக்தி படைத்தவராக அருள்பாலிக்கிறார். சங்கடஹரசதுர்த்தி நாட்களில் இவருக்கு அபிஷேகம் செய்து, புதுவஸ்திரம் சாத்தி, அர்ச்சனை செய்தால் நாகதோஷம் விலகுவதாக நம்பிக்கையுள்ளது. சுவாமிக்கு எதிரில் இருக்க வேண்டிய நந்தியும் சற்று விலகி இருக்கிறது. முருகனின் மயில் வாகனம், பைரவரின் நாய் வாகனம் ஆகியவற்றின் தலைப்பகுதி சுவாமிக்கு வலது பக்கம் இருப்பது வழக்கம், ஆனால், இங்கு இடப்பக்கமாக திரும்பியுள்ளது.

திருப்பணி: சுவாமி சந்நிதியிலிருந்து எட்டையபுரம் ஜமீன் அரண்மனைக்கு செல்லும் வகையில் இருந்த சுரங்கப்பாதை தூர்ந்து போய், வாசல் மட்டும் தற்போது உள்ளது. பல ஆண்டுகளாக கோயில் பராமரிக்காமல் மூடிகிடந்ததால் சுவர்கள், தூண்கள், தரை தளம், மேல் கூரை போன்றவை இடிந்து விழும்நிலையில் உள்ளது. தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் மதிப்பில் திருப்பணி செய்து வருகிறது. திருப்பணியில் பங்கேற்று இறையருள் பெறலாம்.

திருவிழா: சித்திரை திருவிழா, ஐப்பசி அன்னாபிஷேகம், சிவராத்திரி, பவுர்ணமி, பிரதோஷம்.

திறக்கும் நேரம்: காலை 8.30- பகல் 11.30 மணி, மாலை 3- இரவு 6 மணி.

இருப்பிடம்: மதுரையில் இருந்து 78 கி.மீ., தூரத்திலுள்ள சாத்தூர் சென்று, அங்கிருந்து 14 கி.மீ., தூரம் உள்ள கோல்வார்பட்டிக்கு மினி பஸ், ஆட்டோவில் செல்லலாம்.

போன்: 94429 98277.






      Dinamalar
      Follow us