sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

திருமணத்தடை நீக்கும் கல்யாண வெங்கடேசர்

/

திருமணத்தடை நீக்கும் கல்யாண வெங்கடேசர்

திருமணத்தடை நீக்கும் கல்யாண வெங்கடேசர்

திருமணத்தடை நீக்கும் கல்யாண வெங்கடேசர்


ADDED : பிப் 24, 2017 10:18 AM

Google News

ADDED : பிப் 24, 2017 10:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி அருகிலுள்ள தென்னம்பாக்கம் கல்யாண வெங்கடேசப் பெருமாள் கோவில் திருமணத்தடை நீக்கும் தலமாக விளங்குகிறது. பிப்.26ல் இங்கு திருக்கல்யாண மகோத்ஸவம் நடக்கிறது.

தல வரலாறு: திருமூலர், பிருகு, அகத்தியர், வசிஷ்டர் எழுதிய நாடி ஜோதிட ஓலைச்சுவடிகளில், “கலியுகத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் கல்யாண வெங்கடேசப் பெருமாள் இத்தலத்தில் எழுந்தருளுவார்,” என்று மகரிஷிகளின் வாக்காக கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இங்கு கோவில் அமைக்கப்பட்டது. ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகளால் மங்களாசாசனம் செய்த பெருமை கொண்டது இத்தலம். கோவிந்த உபாசகர் சீதாராம சுவாமி 1996ல் சம்ப்ரோக்ஷணம் (கும்பாபிஷேகம்) செய்து வைத்தார்.

கல்யாண மகோத்ஸவம்: பிப்.26 காலை 11:00 மணிக்கு திருக்கல்யாண மகோத்ஸவம் நடக்கிறது. திருமணத்தடை உள்ளவர்கள் இதில் பங்கேற்றால், கிரக தோஷம் நீங்குவதோடு விரைவில் திருமணம் கைகூடும். திருவோண நட்சத்திரத்தன்று திருமஞ்சன (அபிஷேகம்) சிறப்பு வழிபாடு நடக்கிறது.

திருமணம், குழந்தைப்பேறு தடை நீங்க இதில் பங்கேற்கலாம். நோய்கள் நீங்கி உடல்நலம் பெற சக்கரத்தாழ்வாருக்கு சித்திரை நட்சத்திரத்தன்றும், யோக நரசிம்மருக்கு சுவாதி நட்சத்திரத்தன்றும் பூஜை செய்கின்றனர். இங்குள்ள காரிய சித்தி அனுமனுக்கு சனிக்கிழமையில் துளசி மாலை சாத்தி வழிபட நினைத்தது நிறைவேறும்.

இருப்பிடம்: புதுச்சேரி - தவளக்குப்பம் சாலையில் 25 கி.மீ., தூரத்தில் ஏம்பலம் காணாந்தோப்பு. இங்கிருந்து ஒரு கி.மீ., தூரத்தில் கோவில்.

நேரம்: காலை 6:00 - மதியம் 12:00 மணி, மாலை 3:00 - இரவு 8:00 மணி

அலைபேசி: 97894 42808, 84894 16530, 89393 19214






      Dinamalar
      Follow us