sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

போராடுவதில்தான் ஆனந்தம் இருக்கிறது - உற்சாகமூட்டுகிறார் காந்திஜி

/

போராடுவதில்தான் ஆனந்தம் இருக்கிறது - உற்சாகமூட்டுகிறார் காந்திஜி

போராடுவதில்தான் ஆனந்தம் இருக்கிறது - உற்சாகமூட்டுகிறார் காந்திஜி

போராடுவதில்தான் ஆனந்தம் இருக்கிறது - உற்சாகமூட்டுகிறார் காந்திஜி


ADDED : ஜூன் 24, 2011 03:27 PM

Google News

ADDED : ஜூன் 24, 2011 03:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடவுளிடம் நம்பிக்கை வைத்து அவருக்கு மட்டுமே பயந்து நடந்தால் எவருக்கும் நாம் பயப்பட வேண்டியதில்லை.

* எவ்வளவு பயங்கரமான இம்சையையும் எதிர்த்து நிற்பதற்கேற்ற சக்தி வாய்ந்த ஆயுதம் அகிம்சையைத் தவிர வேறெதுவும் இல்லை.

* உண்மையான அன்பை வெறும் வாய்ப்புகழ்ச்சியின் மூலமாக மட்டும் காட்டிவிட முடியாது. செயலின் மூலமே காட்ட முடியும்.

* ஆடம்பரமும், சுதந்திரமும் ஒன்று இல்லை. நம்முடைய நிதி நிலவரத்திற்கு ஏற்றபடி தான் வாழ்க்கை நடத்த வேண்டும்.

* உடலும் உள்ளமும் தூய்மையாக இருக்கும் அளவைப் பொறுத்து தான் உடல் ஆரோக்கியமும் மனவளமும் அதிகரிக்கிறது.

* ஆனந்தம் என்பது போராட்டத்தில் தான் இருக்கிறது. போராட்டத்தின் விளைச்சல் ஆண்டவன் அருளைப் பொறுத்து கிடைக்கும்.

* இறைவனின் திருவடியை அடைந்தவர்களை நினைத்து அதிகமாகத் துக்கப்படக்கூடாது; ஏனெனில், இறந்தவரின் ஆத்மா என்றுமே அழியாமல் இருந்து வருகிறது.

* நாக்கிற்கு இனிமை தரும் பொருள்களை விரும்புவதை விட, மனதிற்கு இனிமை தரும் பொருள்களை விரும்புங்கள்.

* 'நம்மைவிட இவர் தாழ்ந்தவர்' என்று யாரைப்பற்றியும் நாம் நினைக்கக்கூடாது. அவ்வாறு நினைப்பவர்கள் தீயவர்களாகக் கருதப்படுவர். இந்த குணத்தை ஒழிக்காவிட்டால் அவ்வாறு நினைப்பவர்களை இந்த எண்ணமே தின்றுவிடும்.

* மாணவர்களின் மூளையைக் கூர்மைப்படுத்துவதற்குப் பதிலாக அவர்களின் இதயங்களை ஆசிரியர்கள் பக்குவப்படுத்த வேண்டும். ஏமாற்றத்தையும் ஏக்கத்தையும் குறிப்பிடும் எந்த வார்த்தையையும் மாணவர்களின் அகராதியிலிருந்து துடைத்தெறிந்து விட ஆசிரியர்கள் உதவி புரிய வேண்டும்.

* எண்ணம் என்பது மகத்தானதாகவும், புதுமையானதாகவும் இருந்தால் அதன் விளைவும் மகத்தானதாக இருக்கும்.

* கெட்ட காற்று வெளியேற வேண்டுமானால், நல்ல காற்று வேகமாக உள்ளே நுழைய வேண்டும். அதுபோல் கெட்ட எண்ணம் வெளியேற வேண்டுமானால் நல்ல எண்ணங்கள் உட்புக வேண்டும்.

* பிறரை பயமுறுத்தி நம்முடன் ஒத்துழைக்கும்படிச் செய்ய முடியாது, அவ்வாறு செய்தால் நாம் பலரது அனுதாபத்தையும். ஆதரவையும் இழந்துவிடுவோம். எனவே அன்புடன் அனைவருடனும் ஒத்துழைக்க வேண்டும்.

* நம்முடைய கலாச்சாரத்தில் எது சிறப்பானதோ அதைப் பேணி வைத்துக் கொள்ளவும், எது கீழ்த்தரமாகவும், கேடுள்ளதாகவும் விளங்குகிறதோ அதைச் சிறிதும் தயக்கமின்றியும் புறக்கணித்துவிட வேண்டும்.

* அறிவையும் பொறுமையும் தக்க சமயத்தில் உபயோகித்தால் எவராலும் தகர்க்கவே முடியாத சக்தி வந்து சேரும்.

* நீண்ட காலமாக உடம்போடு உடம்பாக ஊறிவந்திருக்கும் சமுதாயக் கேடுகளை ஒரேயடியாக ஒழித்துவிட முடியாது, அதற்கு நிதானமும் தளரா முயற்சியும் தேவை.

* சீர்திருத்தம் செய்ய விரும்புகிறவர்கள் தங்கள் குறிக்கோள் நிறைவேற வேண்டுமானால், உணர்ச்சிவசப்படுவதையும், கோபப்பட்டு குதிப்பதையும் தவிர்க்க வேண்டும்.






      Dinamalar
      Follow us