ADDED : பிப் 05, 2013 12:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எத்திராஜர் என்று குறிப்பிடப்படுபவர் ராமானுஜர். துறவிகளை வடமொழியில் 'யதி' என்பர். இச்சொல்லுக்கு 'அடக்கியவர்' என்ற பொருளும் உண்டு. ஐம்புலன்களையும், மனதையும் அடக்க வல்லவரே துறவியாக முடியும் என்பதால் 'யதி' என்பர். துறவிகளில் சிறந்து விளங்கியதால் ராமானுஜருக்கு 'யதிராஜர்' என்று பெயர் வந்தது. இச்சொல்லே 'எத்திராஜர்' என்றாகி விட்டது. ராமானுஜர் மீது கொண்ட பக்தியை வெளிப்படுத்தும் விதத்தில் குழந்தைகளுக்கு 'எத்திராஜ்' என்று பெயரிடுவர்.

