ADDED : ஜன 13, 2017 10:38 AM

மனித வாழ்வில் குறுக்கிடும் இன்ப, துன்பம் அனைத்திற்கும் காரணமே கிரகங்களே. இவற்றிற்கு தலைமை நாயகராக ஆட்சி செய்பவர் சூரியன். ஒருவரது ஜாதகத்தில் சூரிய பலத்தைப் பொறுத்தே அவருடைய ஆளுமைத்தன்மை, ஆட்சி, அதிகாரம் அனைத்தும் உண்டாகும். ஆத்மகாரகன் என போற்றப்படும் இவர் தந்தை, தலை, உடல்நலம், பணிவாய்ப்பு, வலக்கண், வைத்தியம், தைரியம், புகழ் ஆகியவற்றுக்கு காரண கர்த்தாவாக இருக்கிறார். கார்த்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களுக்கு உரிய இவர், தான் இருக்கும் ராசியில் இருந்து ஏழாம் ராசியைப் பார்க்கும் சக்தி கொண்டவர்.
ஜாதகத்தில் சூரியனும், குருவும் ஒரே ராசியில் சேர்ந்திருந்தாலோ அல்லது சூரியனுக்கு ஏழாம் ராசியில் இருந்தாலோ பலமான ஆன்மிக யோகம் அமையும். அந்த ஜாதகர் பக்திப்பழம் என்று அனைவராலும் போற்றப்படுவார் என்கிறது ஜோதிடம்.

