ADDED : செப் 01, 2016 09:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விநாயகருக்கு எருக்கம்பூ, அருகம்புல் இதையெல்லாம் மாலையாக கட்டிப்போட்டால் பிடிக்கும் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அவருக்கு 'ஸுமநஸ்' என்ற பூ பிடிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? உடனே பூக்கடைக்கு போய் விசாரிக்க கிளம்பி விடாதீர்கள். இது ஒரு சமஸ்கிருத சொல். இதற்கு 'நல்ல எண்ணம் என்னும் மலர்' என்று பொருள். செடி, கொடிகள் தங்களின் மன உணர்வை பூக்களை மலரச் செய்வதன் மூலம் பிரதிபலிக்கிறது. இதனால் தான் மலர்களில் தேன் சுரந்து கொண்டிருக்கிறது. அதுபோல 'ஸுமநஸ்' எனப்படும் நல்ல மனதில் நல்ல எண்ணங்கள் என்னும் மலர்கள் பூக்கும். அந்தப் பூக்களை விநாயகருக்கு சூட்டினால் வாக்கு வன்மை, லட்சுமியின் அருள், தேக ஆரோக்கியம் உள்ளிட்ட பலன்கள் கிடைக்கும் என்று அவ்வைப்பாட்டி பட்டியல் இடுகிறாள்.

