ADDED : டிச 03, 2013 01:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமாயணத்தின் கதாநாயகன் ராமன். ராமனுக்கு நேர் எதிராக இருப்பவன் ராவணன். இந்த இருவரின் பெயருக்கான அர்த்தம் தெரிந்து கொண்டால் ராமாயணமே அதில் அடங்கி விடும். ராமன் என்றால் 'ஆனந்தத்தை அளிப்பவன்', 'மனதிற்கு மகிழ்ச்சி தருபவன்' என பொருள். தன்னைச் சேர்ந்தவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே ராமனின் குறிக்கோள். 'ராவணன்' என்பதற்கு நல்லவர்களைத் துன்புறுத்துவன், இருள் போன்றவன், நன்றாக அழக்கூடியவன் என்று அர்த்தம். ராமனின் சகோதரரான பரதன் என்றால் 'உலகைக் காப்பவன்'. 'லட்சுமணன்' என்றால் 'வனவாசத்திலும் அழகு குன்றாதவன்'. 'சத்ருகனன்' என்றால் 'பகைவர்களாகிய மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவற்றை வென்றவன்' என்று பொருள்.

