ADDED : ஜன 06, 2017 09:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மார்கழி வளர்பிறை ஏகாதசி திதி, வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடப்படுகிறது. இந்த விரதம் இருப்பவர்கள், ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று விரதம் தொடங்கி விட வேண்டும். அன்று ஒருவேளை சாப்பிடலாம். மறுநாள் ஏகாதசியன்று பட்டினி இருக்க வேண்டும். துளசி நீர் குடிக்கலாம். உடல்நிலை முடியாதவர்கள் எளிய உணவு சாப்பிடலாம். ஏகாதசியன்று இரவில் விழித்து பெருமாளின் திருநாமங்களை சொல்ல வேண்டும். மறுநாள், துவாதசியன்று காலையில் நீராடி திருமண் இட்டு, துளசி தீர்த்தம் அருந்த வேண்டும். அதன் பிறகு 21 வித காய்கறிகள் இடம் பெற்ற உணவைச் சாப்பிடலாம். அகத்திக்கீரை, நெல்லிக்காய் அவசியம் சேர்க்க வேண்டும். இந்த விரதத்தை முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுஷ்டிப்பதாக ஐதீகம் இருப்பதால் இந்நாளுக்கு வைகுண்ட முக்கோடி ஏகாதசி என்று பெயருண்டு.

