ADDED : டிச 02, 2016 10:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாவைநோன்பு என்னும் கன்னியர் விரதம் தமிழகத்தின் மிகப்பழமையான விரதங்களில் ஒன்றாகும். இவ்விரதத்தின் அடிப்படை நோக்கம், நாடு செழிக்க நல்ல மழை வேண்டும் என்பதும், நோன்பு நோற்கும் கன்னிப்பெண்களுக்கு நல்ல கணவன் அமைய வேண்டும் என்பதுமாகும். ஒரு காலத்தில் இந்த விரதம் “தை நீராடல்” என்ற பெயரில் தை மாதத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. பின்னாளில் இது மார்கழியில் கடைபிடிக்கப்பட்டது. தற்போது இந்த விரதம் 'தனுர்மாத விரதம்' என்று மாறி விட்டது.

