ADDED : ஆக 27, 2012 09:31 AM

அசுரகுரு சுக்ராச்சாரியார், மகாபலிச்சக்கரவர்த்திக்காக விஸ்வஜித் யாகத்தை நடத்தினார். யாகபயனால் ஹோமகுண்டத்தில் இருந்து தேர்வில், அம்புறாத்தூணி, பலவித கவசங்கள் கிடைத்தன. அவற்றுடன் மகாபலி தேவலோகம் சென்றான். தேவர்கள் அஞ்சி ஓடினர். தேவர்களின் தாய் அதிதி தன் பிள்ளைகளைக் கண்டு வருந்தினாள். காக்கும்கடவுள் விஷ்ணுவைச் சரணடைந்து,
யஜ்ஞேச யஜ்ஞ புருஷாச்யுத தீர்த்த பாத
தீர்த்த ச்ரவ: ச்ரவண மங்கள நாமதேயா''
என்ற ஸ்லோகம் சொல்லி வழிபட்டாள்.
''யாகங்களால் ஆராதிக்கப்படுபவனே! பழமை மிக்கவனே! புதுமையானவனே! கங்கையை திருவடியில் கொண்டவனே! ஆறு போல பெருகி அருள் பொழிபவனே! கல்யாண குணம் மிக்க திருநாமங்களைக் கொண்டவனே!'' என்பது இதன் பொருள். விஷ்ணு ஆவணி திருவோண நட்சத்திரத்தில், அதிதியின் மகனாக வாமனராகப் (குள்ள வடிவம்) பிறந்தார். மகாபலியிடமிருந்து தேவர்களைக் காப்பாற்றினார். அதிதி ஜெபித்த இந்த ஸ்லோகத்தைச் சொன்னால் குழந்தைகள் தாய் மீது பாசமுடன் திகழ்வர்.

